புகழ் பெற்ற கவிஞர் வீட்டில் திருடிவிட்டேனே.. பொருட்களை போட்டுவிட்டு மன்னிப்பு கடிதம் எழுதிய திருடன்
மும்பை: மகாராஷ்டிராவில் பிரபல கவிஞர் வீட்டில் பொருட்களை திருடியதற்காக வருத்தப்பட்ட திருடன், மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு, பொருட்களை திரும்ப கொண்டு வந்து வீட்டில் வைத்துவிட்டு சென்றுள்ளார். இந்த நூதன சம்பவம் பற்றி பார்ப்போம்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் நேரல் பகுதியில் பிரபல மராத்தி எழுத்தாளரும், கவிஞருமான நாராயண் சுர்வேவின் வீடு இருக்கிறது. சமீபத்தில் திருடர் ஒருவர் இவரது வீட்டை திருடுவதற்காக நோட்டமிட்டு வந்தார். திருடன் எதிர்பார்த்தது போலவே வீடு சில நாட்களாக பூட்டிக் கிடந்தது. நைசாக பூட்டை உடைத்த திருடன், உள்ளே புகுந்து ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றார்.

மறுநாள் மீண்டும் அதே வீட்டில் மிச்சம் மீதி இருப்பதை திருட வந்துள்ளார். அப்போது பிரபல கவிஞரான நாராயண் சுர்வேவின் வீடு என்பதை திருடன் கண்டுபிடித்துள்ளார். வீட்டில் கவிஞர் படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருடன், இவர் வீட்டில் போய் திருடிவிட்டோமே என்று கவலை அடைந்தார்.
கவிஞர் நாராயண் சுர்வே மகாராஷ்டிராவில் பலருக்கும் தெரிந்த எழுத்தாளர். மும்பை தெருக்களில் ஆதரவற்ற சிறுவனாக வாழ்ந்த நாராயண் சுர்வே, வீட்டுவேலை, ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலை, குழந்தை காப்பாளர், நாய் பராமரிப்பு, பால் டெலிவிரி செய்வது, சுமை தூக்குபவர் என பல்வேறு வேலைகளை செய்து பின்னாட்களில் பிரபல எழுத்தாளராக மாறி, கடைசியில் கவிஞராக மாறியவர். அவரது கவிதைகள் நகர்ப்புற ஏழை தொழிலாளர்களுக்கு உயிர்நாடியாக உள்ளது.
இதை அறிந்த திருடனுக்கு கவிஞர் நாராயண் சுர்வேவை வீட்டில் திருடி விட்டோமே.. என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கவிஞரின் வீட்டில் திருடிய டிவி உள்ளிட்ட பொருட்களை அந்த திருடர் மூட்டை கட்டி மீண்டும் கவிஞரின் வீட்டில் கொண்டு வந்து வைத்துள்ளார். மேலும் வீட்டில் ஒரு துண்டு சீட்டில் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதி சுவரில் ஒட்டிசென்றுள்ளார். அதில், "மிக உயர்ந்த எழுத்தாளர், கவிஞர் வீட்டில் திருடியதற்காக என்னை மன்னித்து விடுங்கள்" என குறிப்பிட்டு இருந்தார்.
கவிஞர் நாராயண் சுர்வே கடந்த 2010-ம் ஆண்டு தனது 84-வது வயதில் காலமானார். தற்போது அவரது வீட்டில் மகள் சுஜாதா, கணவர் கணேஷ் காரேவுடன் வசித்து வருகிறார். அவர்கள் திரும்பி வந்தபோது, வீட்டில் திருடன் எழுதி வைத்து சென்ற மன்னிப்பு கடிதத்தை பார்த்தனர். திருடனின் செயலை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர்.
எனினும் இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி திருடனை தேடி வருகிறார்கள்.
திருடன் ஒருவர் கவிஞரின் வீட்டில் திருடிய பொருட்களை திரும்ப வைத்து, மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் மகாராஷ்டிராவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications