Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“என் வீட்டை இடித்தவர்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டனர்” மும்பையில் பாஜக வெற்றியை கொண்டாடிய கங்கனா ரனாவத்

Subscribe to Oneindia Tamil

மும்பை: "என் வீட்டை இடித்தவர்களை மும்பை நிராகரித்துவிட்டது" என நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மும்பை மாநகராட்சித் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதற்காக, பாஜக எம்.பி கங்கனா ரனாவத், பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று முன்தினம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டன. மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மும்பை மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. மும்பை மாநகராட்சியை 28 ஆண்டுகளாக தாக்கரேவின் ஒருங்கிணைந்த சிவசேனா தமது கோட்டையாக வைத்திருந்தது. தற்போது சிவசேனா பிளவுபட்டதால் பாஜக கூட்டணி வசமாகி உள்ளது மும்பை மாநகராட்சி.

maharashtra corporation bjp

மும்பை மாநகராட்சியை பாஜக - சிவசேனா கூட்டணி கைப்பற்றுகிறது. மொத்தமுள்ள 227 வார்டுகளில், பாஜக 89 வார்டுகளிலும், சிவசேனா 29 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இக்கூட்டணி 118 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 114 வார்டுகளின் வெற்றி தேவை எனும் நிலையில், இக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதற்காக, நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத், பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்ட தனது கட்சியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பணக்கார நகராட்சி அமைப்பான பி.எம்.சி தேர்தலில் வெற்றியைப் பெற்றதை கங்கனா ரனாவத் கொண்டாடியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு பிரிக்கப்படாத சிவசேனா ஆட்சியில் இருந்தபோது, ​​மும்பையில் உள்ள தனது பங்களாவுடன் இணைக்கப்பட்ட அலுவலகத்தை பிரஹன் மும்பை மாநகராட்சி (BMC) இடித்த நிலையில், தற்போது தாக்கரே தரப்பு தோல்வியைத் தழுவியுள்ள நிலையில் அதனை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.

"மகாராஷ்டிரா பி.எம்.சி தேர்தலில் பாஜக பெற்ற மகத்தான வெற்றியில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நம்பமுடியாத வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மகாராஷ்டிராவின் முழு பாஜக குடும்பத்தினரையும் நான் வாழ்த்துகிறேன்," என்று கங்கனா ரனாவத் தெரிவித்தார்.

"சட்டத்தில் தீமையைத் தவிர வேறில்லை" என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த தனது சொத்துக்கு எதிரான மும்பை மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையை நினைவு கூர்ந்த கங்கனா ரனாவத், "என்னை துஷ்பிரயோகம் செய்தவர்கள், என் வீட்டை இடித்தவர்கள், என்னைப் பெயர் சொல்லி அழைத்தவர்கள், மகாராஷ்டிராவை விட்டு வெளியேறும்படி மிரட்டியவர்கள் ஆகியோரிடம் இருந்து இன்று மகாராஷ்டிரா அவர்களை விட்டுச் சென்றுவிட்டது" என்று கூறினார்.

"பெண்களை வெறுப்பவர்கள், கொடுமைப்படுத்துபவர்கள் மற்றும் உறவினர்களுக்குச் சலுகை வழங்கும் மாஃபியாக்களுக்கு ஜனதா ஜனார்தன் சரியான இடத்தைக் காட்டியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+