Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2020இல் மொத்த சொத்தும் திவால்; இன்று 5 ஆயிரம் கோடியில் வீடு? டாடா, அதானி இல்லை.. யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது நிறுவனம் முழுக்க திவாலாகிவிட்டது என்று அறிவித்த கோடீஸ்வரர் ஒருவர் மீண்டும் தனது வாழ்க்கையில் முன்னேறி பணக்காரர்களின் வரிசையில் தன்னை மறுபடியும் தக்கவைத்துக் கொண்டுள்ளார். யார் அவர்? இது எப்படி முடிந்தது?

ஒட்டுமொத்த வாழ்க்கையே தரைமட்டமாக உடைந்து நொறுங்கிய பிறகு ஒரு மனிதரால் மீண்டும் உச்சத்தை தொட முடியுமா? பல கோடி மதிப்புள்ள நிறுவனம் திடீரென்று நஷ்டமடைந்து பூஜ்ஜியத்திற்கு வந்து சென்ற பிறகு 'இனிமேல் செய்வதற்கு ஒன்றும் இல்லை. என் கம்பெனி திவாலாகிவிட்டது’ என்று பகிரங்கமாக அறிவித்தவர் இன்று மறுபடியும் உலக பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? பத்து பைசா நிறுவனத்தில் இல்லை. மொத்த காசும் அம்பேல் என அறிவித்தவர் இன்று 5 ஆயிரம் கோடிக்கு அதிபதியாகி இருக்கிறார். தனியார் ஜெட் விமானங்களை வைத்திருக்கிறார். யார் அவர்? சினிமா பட வசனத்தில் வருவதைப் போல 'எனக்கே அவரைப் பார்க்க வேண்டும்போல இருக்கும்?’ என்று உங்கள் மனம் துடிக்கிறதா?

anil ambani mukesh ambani

இவர் நிச்சயம் முகேஷ் அம்பானி இல்லை. ரத்தன் டாடா அல்லது அதானியோ இல்லை. வேறு யார்? அவர்தான் அனில் அம்பானி. கடந்த 2008இல், அனில் அம்பானி அவரது அண்ணன் முகேஷ் அம்பானிவிட பணக்காரர் என்று நிலையை அடைந்தார். அதாவது உலகின் 6ஆவது பணக்காரர் என்ற இடத்தை எட்டிப் பிடித்தார். அண்ணனையே விஞ்சிய அதிபுத்திசாலி என அவரை உலகம் கொண்டாடியது. உலகப் பணக்காரப் பட்டியலில் அனில் அம்பானி இடம்பெற்றபோது அவர் ரிலையன்ஸ் குழுமத்தின் (ரிலையன்ஸ் ஏடிஏ குழுமம்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் தரப்பட்டியலின் படி இவர்வர் 42 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்கு அதிபதியாக இருந்தார். இன்றைக்கு இந்தச் சொத்தின் தோராய மதிப்பு ரூ. 350 கோடி.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் இருந்து பிரிந்த பிறகு 2006 இல் ரிலையன்ஸ் குழுமம் உருவாக்கினார். அனில் அம்பானி ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் எனப் பல பெயர்களில் பொது வர்த்தக நிறுவனங்களை அனில் அம்பானி வழிநடத்தினார். இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவை (ரிலையன்ஸ் பவர்) மேற்பார்வையிட்ட பெருமை இவருக்குக் கிடைத்தது. கூடவே அவர் பொழுதுபோக்குத் துறைகள் சார்ந்த தொழில்களைத் தொடங்கி அதில் முன்னேற்றம் கண்டார். அட்லாப்ஸ் ஃபிலிம்ஸில் நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கி குவித்தார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ட்ரீம்வொர்க்ஸுடன் இணைந்து 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கூட்டு வர்த்தக முயற்சியில் ஈடுபட்டார்.

இந்தக் காலகட்டத்தில் அனில் தொட்டது எல்லாம் பொன்னானது. கை பட்டது எல்லாம் தங்கமாக மின்னியது. இனி இவரை எட்டிப் பிடிக்க வேறு ஆள் இல்லை என நினைத்த காலத்தில் மெல்ல இவரது கப்பல் தடுமாறத் தொடங்கியது. சரியாகப் பிப்ரவரி 2020 இல், அனில் அம்பானி திடீரென்று தனது நிறுவன திவாலாகி விட்டது என்று அறிவித்தார். முன்னதாகவே சில சட்டரீதியான கடன் தகராறுகளில் சிக்கிய இவர், பெருகிக்கொண்டே வரும் பொறுப்புகளைக் குறைப்பதற்காக தனது நிறுவனத்தின் நிகர மதிப்பைப் பூஜ்ஜியம் அறிவித்தார். அந்த ஆண்டு டிசம்பரில், ரிலையன்ஸ் கேபிடல் லிமிடெட் நிறுவனம் சுமார் ரூ. 20,379.71 கோடி கடனை எதிர்கொண்டு தத்தளித்து வருவதாக அறிவித்தது.

அனில் அம்பானியின் மகன்களான ஜெய் அன்மோல், ஜெய் அன்ஷுல் அம்பானி ஆகியோர் நிறுவனத்தைக் காப்பாற்றப் பல நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அப்பா ஏற்கெனவே முழுவதுமாக மூழ்கிவிட்டார் என்பதை பிறகே மகன்கள் உணர்ந்தார்கள். ஆனாலும், புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதைப் போல மகன்களின் மூளை தொழிலைத் தடுமாற்றத்திலிருந்து படிப்படியாக உயர்த்தியது. இறுதியில் நிறுவனத்தின் நிலைமை சீரடையத் தொடங்கியது. மகன்களின் தலைமையின் கீழ், நிறுவனம் மீண்டும் மறுமலர்ச்சி அடைந்தது. ரிலையன்ஸ் பவரின் பங்கு விலை கணிசமாக உயரத் தொடங்கியது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிப்பான் ரிலையன்ஸ் கேபிட்டலில் பெரிய முதலீடுகளைச் செய்தது.

anil ambani mukesh ambani

இப்போதும் கூட பலவிதமான வணிகப் போராட்டங்கள் இருந்தபோதிலும், அனில் அம்பானியின் தற்போதைய நிகர மதிப்பு சுமார் 29.9 மில்லியன் டாலர் (ரூ. 249 கோடி) என தி டைம்ஸ் ஆஃப் இந்தியா கணித்துள்ளது. அதே சமயம் இவரது நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.10,759 கோடி என டிஎன்ஏ அறிக்கையின்படி தெரியவந்துள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் பாலிவுட் நடிகையான டினா முனிமை மணந்த அனில் அம்பானி, மும்பையின் பாலி ஹில் பகுதியில் பிரமாண்டமான 17 மாடி வீட்டை கட்டினார். சுமார் ரூ.311 கோடி மதிப்புள்ள தனியார் ஜெட் விமானத்தையும், உயர் ரக கார்கள் பல வைத்துள்ளார். ஆடம்பரமான வாழ்க்கைக்குக் குறை ஒன்றும் இல்லை எனச் சொல்லும்படி தனது ராஜ வாழ்க்கையை தளரவிடாமல் அப்படியே பராமரித்து வருகிறார்.

'அபோட்' என அழைக்கப்படும் இவர்களின் வீடு மொத்தம் 16,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. வீட்டின் மேலே ஹெலிபேட் நிறுத்தி வைக்க ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது. வானம் பார்த்த நீச்சல் குளம், அகலமான மொட்டை மாடி தோட்டங்கள், பல உடற்பயிற்சி கூடங்கள், கேரேஜ்கள் என்றும் அனில் அம்பானியின் ஒவ்வொரு வாரிசுகளுக்கு ஒரு தனி தளம் உள்ளது. சர்வதேச கட்டிடக் கலைஞர்கள் இந்த வீட்டின் உட்புறங்களை வடிவமைத்துள்ளனர். அனில் மற்றும் டினா அம்பானி அவர்களது இரண்டு மகன்கள் மற்றும் மருமகள் என பலரும் இந்த பங்களாவில் வசிக்கின்றனர்.

அவர்களது வீட்டைத் தவிர, இந்தக் குடும்பம் ரூ.311 கோடி மதிப்பிலான Bombardier Global Express XRS தனியார் ஜெட் விமானத்தையும் வைத்துள்ளது. ஜெட் 6,390 நாட்டிகல் மைல்கள் செல்லும் திறன் கொண்டது. அதற்குள் மூன்று தனித்தனி கேபின்கள் உள்ளன. இந்தக் குடும்பத்தின் சொகுசு கார் சேகரிப்பில் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் (ரூ. 3.5 கோடி), லெக்ஸஸ் எஸ்யூவி, ஆடி க்யூ7 (ரூ. 88-97 லட்சம்), மற்றும் மெர்சிடிஸ் ஜிஎல்கே350 (ரூ. 77 லட்சம்) விதவிதமான வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+