திடீரென மாயமாக மறைந்த நம்பர் பிளேட்.. சொகுசு காரில் முறைகேடு! ஃபைன் மட்டும் போதுமா? மக்கள் கேள்வி

Subscribe to Oneindia Tamil

மும்பை: சொகுசு கார் வைத்திருந்தால் ஏதோ சொந்தமாக கப்பலே வைத்திருப்பதை போன்று நினைப்பு பலருக்கும் இருக்கிறது. ஆனால் இப்படி நினைப்பவர்கள்தான் போக்குவரத்து விதிமீறல் விஷயத்தில் வசமாக சிக்கிக்கொள்கிறார்கள். மும்பையில் இப்படி ஒருவர் தொக்காக மாட்டியிருக்கும் சம்பவம் கவனம் பெற்றிருக்கிறது.

மகாராஷ்டிராவின் சாலை ஒன்றில், டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அதன் பின்னால் இருக்கும் நம்பர் பிளேட் திடீரென கருப்பு நிற ஸ்லைடிங் கவர் மூலம் முழுமையாக மூடி மறைக்கப்படும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

SUV Toyota RTO

காரின் டிரைவர், உள்ளே இருந்தபடி பட்டனை தட்டினால், நம்பர் பிளேட் தானாக மூடிக்கொள்கிறது. இந்த டெக்னாலஜி சட்ட விரோதமானதாகும். சரி நம்பர் பிளேட்டை யாருக்கும் தெரியாமல் மறைக்கிறாரே.. இவர் சமூகத்தில் பெரிய கையாக இருப்பாரோ? என்று கேள்வி வீடியோவை பார்த்த பலருக்கும் எழுந்தது. எனவே ஃபார்ச்சூனர் காரின் நம்பரை செக் செய்து பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் பெரிய உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதாவது இந்த கார் தொடர்ந்து விதி மீறல்களில் சிக்கியிருக்கிறது. இதற்காக ரூ.1,00,800 வரை காருக்கு ஃபைன் போடப்பட்டிருக்கிறது.

மொத்தம் 55 சாலான்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் 50 சாலான்கள் அதி வேகமாக காரை ஓட்டியதற்காக கொடுக்கப்பட்டதாகும். அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக சென்றதற்காக மட்டுமே.. ஒவ்வொரு விதிமீறலுக்கும் தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஓட்டுநர் சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதற்காக ரூ.1,000, முன் சீட்டில் உட்கார்ந்து பயணித்த பயணி சீட் பெல்ட் அணியவில்லை என்பதற்காக ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதுபோக.. நம்பர் பிளேட்டை சரியாக காட்டவிலலை என்பதற்காக ரூ.1,000 அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.

நசிகேத் தேஷ்பாண்டே என்ற x பயனர், இந்த காரின் சாலன் விவரங்களை ஷேர் செய்து.. மகாராஷ்டிரா காவல்துறை, பிம்ப்ரி சிஞ்ச்வத் காவல்துறை மற்றும் ஆர்டிஓ அதிகாரிகளின் மெத்தன போக்கை கடுமையாக விமர்சித்திருக்கிறார். கார் ரூ.1 லட்சம் அபராதத்துடன் நம்பர் பிளேட்டை மறைக்கும் வசதியோடு சாதாரணமாக ரோட்டில் சுற்றிகொண்டிருப்பது.. பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்புவதற்கும், போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல் மற்றும் தீவிரவாத நவடிக்கைகளுக்கு கூட இத்தகைய மறைக்கப்படும் நம்பர் பிளேட் கொண்ட வாகனங்கள் பயன்படுத்தப்படலாம் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர். எனவே இந்த காரை உடனடியாக பறிமுதல் செய்து, அதன் உரிமையாளரின் ஓட்டுநர் உரிமைத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+