கெஞ்சி கேட்ட சீரியல் நடிகை துனிஷா சர்மா.. கழுத்தை நெறித்த தாய் வனிதா.. காதலனின் தாய் பரபரப்பு பேட்டி

Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை துனிஷா ஷர்மாவின் தற்கொலைக்கு அவரது தாய்தான் காரணம் என காதலனின் தாயார் பகீர் பேட்டி அளித்துள்ளார்.

21 வயதாகும் நடிகை துனிஷா சர்மா அலிபாபா தாஸ்தன் இ காபூர் டிவி தொடருக்காக கடந்த மாதம் 24 ஆம் தேதி வசாயில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். திடீரென அவர் படப்பிடிப்பு தளத்தில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நடிகையை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது முன்னாள் காதலனும் சக நடிகருமான ஷீசன் கானை (27) போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணை காலம் முடிந்து கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி போலீஸார் ஷீசனை வசாய் மாஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. முன்னாள் காதலன் ஷீசன் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் டிவி நடிகை துனிஷா சர்மாவை மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக தெரிகிறது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இதை துனிஷாவின் தாய் வனிதா குற்றம்சாட்டியிருந்தார். துனிஷா சர்மாவின் மரணத்தை கொலை வழக்காக விசாரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். துனிஷா அசோக சாம்ராட், பாரத் கா வீர் புத்ரா உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். துனிஷாவின் காதலன் ஷீசன் கானும் அலிபாபா சீரியலில் நடித்து வந்துள்ளார்.

2 வாரங்களுக்கு

2 வாரங்களுக்கு

துனிஷா தற்கொலை செய்து கொள்வதற்கு 2 வாரங்களுக்கு முன் துனிஷாவுடனான காதலை ஷீசன் துண்டித்துள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த நடிகை துனிஷா ஷர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தனது மகளின் மரணத்திற்கு ஷீசன்தான் காரணம் என்றும் துனிஷாவின் தாய் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

மகள் திருமணம்

மகள் திருமணம்

தனது மகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்த ஷீசன் , துனிஷாவை ஏமாற்றிவிட்டார். எனது மகளை காதலித்த போதே ஷீசனுக்கு வேறு பெண்களுடனும் தொடர்பு இருந்திருக்கிறது. இதை தொடர்ந்து ஷீசன் கான் கைது செய்யப்பட்டார். அவரை கஸ்டடியில் எடுத்துள்ள போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஷீசன் கானின் குடும்பம்

ஷீசன் கானின் குடும்பம்

இந்த நிலையில் ஷீசன் கானின் குடும்பத்தினர் வழக்கறிஞருடன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது துனிஷாவின் மரணத்திற்கு அவருடைய குடும்பத்தினர்தான் காரணம் என தாய் வனிதா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அப்போது அவர்கள் தங்களது பேட்டியில் துனிஷாவின் தற்கொலைக்கு நாங்கள் காரணம் இல்லை.

ஷீசன் கானுக்கு எந்த பெண்ணுடனும் தொடர்பில்லை

ஷீசன் கானுக்கு எந்த பெண்ணுடனும் தொடர்பில்லை

ஷீசன் கானுக்கு வேறு எந்த பெண்ணுடனும் தொடர்பில்லை. துனிஷாவை நாங்கள் ஹிஜாப் அணியுமாறு வற்புறுத்தவில்லை. துனிஷா தற்கொலையின் போது மாமா என பேசியிருந்தார். ஆனால் அவர் மாமாவே கிடையாது. 4 ஆண்டுகளுக்கு முன்பு துனிஷாவிடம் மேலாளராக பணிபுரிந்த சஞ்சீவ் கவுஷல்தான். இவரும் துனிஷாவின் தாய் வனிதாவும்தான் துனிஷா சம்பாதிக்கும் பணத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். துனிஷாவுக்கு பணம் வேண்டும் என்றால் இவர்களிடம் கெஞ்சி கெஞ்சிதான் கேட்டு வாங்குவார்.

போன் உடைப்பு

போன் உடைப்பு

சஞ்சீவின் பெயரை கேட்டாலே துனிஷா சர்மா அச்சப்படுவார். சஞ்சீவ் கூறியதை கேட்டு துனிஷாவின் போனை அவரது அம்மா வனிதா பறித்து உடைத்துவிட்டார். துனிஷாவை அவரது அம்மாவும் சஞ்சயும் சேர்ந்துதான் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றனர் என பகீர் கிளப்பியுள்ளார் ஷீசனின் தாய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+