இந்தியாவில் ஓமிக்ரான் 23 பேருக்கு பாதிப்பு: மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி

Subscribe to Oneindia Tamil

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு ஓமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் இதுவரை ஓமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத்தை தொடர்ந்து மகராஷ்டிராவில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ஓமிக்ரான் வைரஸ்

ஓமிக்ரான் வைரஸ்

ஓமிக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. B1.1 529 எனும் புதிய வகை கொரோனா நவம்பர் 25ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கொரோனாவில் இருந்து 30க்கும் அதிகமான முறை மரபியல் மாற்றமடைந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் தொற்று இதுவரை 40 நாடுகளுக்குப் பரவி உள்ளதாகவும், மற்ற நாடுகளைப் பாதிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

ஓமிக்ரானுக்கு பயந்து தடுப்பூசி

ஓமிக்ரானுக்கு பயந்து தடுப்பூசி

இந்தியாவில் சர்வதேச விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டு பயணிகள் பரிசோதனைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்படுகின்றனர். கொரோனா வைரஸ் குறித்து நாளுக்கு நாள் வரும் செய்திகளை பார்த்து மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுநாள் வரை தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போடுவதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந் நிலையில் ரிஸ்க் நாடுகள் என முத்திரை குத்தப்பட்டுள்ள தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 45 நிமிடங்களில் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. முடிவுகள் நெகட்டிவ் வந்தால் மட்டும் அவர்கள் மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அப்படி இல்லை என்றால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று 23

இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று 23

தற்போது நேபாளம், ரஷ்யா, தாய்லாந்து மற்றும் வேறு சில நாடுகளிலும் ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜாஸ்தான், குஜராத் மாநிலங்களின்ல ஓமிக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் மேலும் 2 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆனது.

கொரோனா அப்டேட்

கொரோனா அப்டேட்

இதற்கிடையே நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுக்கு கோவிட் தடுப்பூசியின் 'பூஸ்டர்' டோஸ் வழங்குவது பற்றியும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும் கடந்த திங்கட்கிழமை நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இந்த விஷயத்தில் உறுப்பினர்களால் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் முடிவுகள் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 8,306 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 98,416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 552 நாட்களில் மிகக் குறைவு என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+