சினிமாவில் பார்க்குற மாதிரி இல்லைங்க.. அம்பானி குடும்பத்தினர் "லவ் ப்ரபோஸ்" செய்தது எப்படி தெரியுமா?
பணத்திற்கு பஞ்சமே இல்லாத அம்பானி குடும்பத்தினர் தங்கள் காதலை எளிமையாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
மும்பை: சாதாரண நபர்கள் கூட தங்கள் காதலை வெளிப்படுத்தும் இடம் வாழ்நாளில் மறக்க முடியாத இடமாக இருக்க வேண்டும் என்றும், காதலியோ.. காதலனோ தான் வழங்கும் கிப்டை பார்த்ததும் பிரம்மித்து போய் விட வேண்டும் என்று நினைத்து பெரும் பொருட்செலவும் செய்வார்கள். ஆனால், பணத்திற்கு பஞ்சமே இல்லாத அம்பானி குடும்பத்தினர் எவ்வளவு எளிமையாக தங்கள் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை இங்கே காணலாம்.
காதல் என்பது மந்திர சொல் என்றுதான் சொல்ல வேண்டும். காதலுக்கு கண் இல்லை என்பார்கள். இனம், மொழி, மதம், ஜாதி, வயது எந்த பேதங்களையும் பாராதது காதல். சாதாரண ஒருவரை சாதனையாளர் ஆக்கும் திறமையும் காதலுக்கு உண்டு..
காதல் இல்லையேல் மனித வாழ்வே இல்லை என்று சொல்லிவிடலாம். அதுவும் இளம் வயது காதல் ஜோடிகள் பீச், பார்க், தியேட்டர் என சுற்றி தங்கள் காதலை வளர்ப்பதுண்டு. காதல் ஜோடிகள் இல்லாத பார்க்குகளையே பார்க்க முடியாது.

காதலர் தினம்
இவ்வாறு ஆண்டு முழுவதும் காதலை கொண்டாடி தீர்த்தாலும் அந்த தினத்தை கொண்டாடுவதற்காகவும் ஒரு நாளை உருவாக்கியிருக்கின்றனர். ஆண்டு தோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. சும்மாவே காதலிகள் விரும்பியதை வாங்கிக் கொடுத்து அசத்தும் 2 கே கிட்ஸ்கள் இந்த காதலர் தினம் வந்தால் விட்டு விடுவார்களா என்ன? ஏகத்திற்கும் காதலர் தினத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

விரும்பிய பொருட்களை வாங்கி கொடுத்து
தங்கள் காதலர்களுக்கு விரும்பும் பொருளை வாங்கிக் கொடுத்து அசத்திவிட வேண்டும் திட்டம் போட்டு கமிட் அன காதலர்கள் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.. என்றால், இன்னும் சிங்கிள் ஆகாத இளசுகள் பலரும் இந்த காதலர் தினத்தை ஜோடியாக கொண்டாடுவதற்கு வழி இருக்கிறதா? என ஒரு பக்கம் ஏங்கிக் கொண்டு இருக்கின்றனர். காதலர் தினத்தன்று பலரும் தான் விரும்பியவர்களுக்கு புரபோஸ் செய்வதும் உண்டு. சாக்கலேட் தொடங்கி விரும்பிய பொருட்களை தங்கள் வசதிக்கேற்றவாறு வாங்கி கொடுத்து அசத்துவர்கள்....

அம்பானி குடும்பத்தினரின் லவ் ஸ்டோரி
சாதாரண நபர்கள் கூட தங்கள் காதலை வெளிப்படுத்தும் இடம் வாழ்நாளில் மறக்க முடியாத இடமாக இருக்க வேண்டும்.. காதலியோ.. காதலனோ வழங்கும் கிப்டை பார்த்ததும் பிரம்மித்து போய் விட வேண்டும் என்று ஏகத்திற்கும் திட்டம் போடுவதுண்டு. இதற்கான பெரும் பொருட்செலவும் செய்வார்கள். ஆனால், பணத்திற்கு பஞ்சமே இல்லாத அம்பானி குடும்பத்தினர் எவ்வளவு எளிமையாக தங்கள் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் பாருங்கள்..

முகேஷ் அம்பானிக்கு நீதா அம்பானி
முகேஷ் அம்பானிக்கு நீதா அம்பானியை தந்தை திருபாய் அம்பானியே அறிமுகப்படுத்தி வைத்திருந்தாலும் திருமணத்திற்கு முன்பாகவே இருவரும் சந்தித்து கொஞ்சம் நேரத்தை செலவழித்துள்ளனர். நடுத்தர மக்கள் வாழ்க்கையை முகேஷ் அம்பானிக்கு பழக்குவதற்காக மும்பையின் சாலையோர கடைகளில் முகேஷ் அம்பானியை சாப்பிட வைத்தது பேருந்துகளில் பயணிக்க வைத்தது என நீதா அம்பானி பல இடங்களுக்கும் அழைத்து சென்று இருக்கிறார்.

காரை எடுக்க மறுத்து விட்டார்
கிட்டதட்ட மும்பை முழுவதும் இருவரும் சுற்றியிருக்கின்றனர். ஒருமுறை அப்படித்தான் காரில் நீதா அம்பானியுடன் சென்ற முகேஷ் அம்பானி திடீரெனெ காரை நிறுத்தி எப்போது தன்னை திருமணம் செய்து கொள்வாய் என்று நீதா அம்பானியிடம் கேட்டு இருக்கிறார். நீதா அம்பானி ஒப்புதல் தெரிவிக்கும் வரை காரை எடுக்க மறுத்து விட்டாராம் முகேஷ் அம்பானி. இதையடுத்து திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட நீதா அம்பானி திருமணத்திற்கு பிறகும் தன்னை வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தாராம்.

அனில் அம்பானி - டினா அம்பானி காதல்
அனில் அம்பானி - டினா அம்பானி காதல் கதையும் மிகவும் எளிமையானதுதான். பாலிவுட் நடிகையான டினா முனிமை ஒரு திருமணத்தில் பார்த்த அனில் அம்பானி டினாவின் மீது காதல் வயப்பட்டார். டினாவிடம் அனில் அம்பானி காதலை புரபோஸ் செய்வதற்கு முன்பாகவே அவரது சகோதரர் முகேஷ் அம்பானி டினாவிடம் மொத்த கதையையும் போட்டு உடைத்து அனில் அம்பானியின் புரோபஸ் பிளானை கெடுத்துவிட்டாராம்.

இஷா அம்பானி - ஆனந்த் பரிமல்
இஷா அம்பானியும் அவரது குடும்ப நண்பருமான ஆனந்த் பரிமலும் 2016-ம் ஆண்டு முதலே டேட்டிங் செய்ய தொடங்கினர். ஆனாலும் 2018 ஆம் ஆண்டே தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆனந்த் பரிமல். அதுவும் மும்பையில் உள்ள மஹாபாலேஸ்வர் கோவிலில் வைத்து எளிய முறையில் தனது காதலை புரோபஸ் செய்து இருக்கிறார் ஆனந்த் பரிமல்.

ஆகாஷ் அம்பானி - ஷ்லோகா மேதா
முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஷ்லோகா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் நிச்சயதார்த்தம் 2018-ல் நடைபெற்றது. அப்போதுதான் ஷ்லோகா பற்றிய தகவல் வெளிவந்தாலும் ஆகாஷ் அம்பானியும் ஷ்லோகாவும் படிக்கும் காலத்தில் இருந்தே ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனாலும் உயர் கல்வியை முடிக்கும் வரை தங்கள் காதலை வெளியில் சொல்லக்கூடாது என்று கன்டிஷனுடன் ரகசியமாக காதலித்து வந்து இருக்கின்றனர்.

அன்மோல் அம்பானி - கிரிஷா ஷா
அனில் அம்பானியின் மகனான அன்மோல் அம்பானி மிகவும் எளிய முறையிலேயே தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். தனது தாயாரின் மோதிரத்தை கிரிஷா ஷாவிற்கு கொடுத்து தனது காதலை கூறியிருக்கிறார் அன்மோல் அம்பானி.

ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சண்ட்
முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி ராதிக மெர்சண்டிடம் மும்பையில் உள்ள மோதி மஹாலில் வைத்து தனது காதலை கூறினாராம். அம்பானி குடும்பத்தில் கொஞ்சம் ஆடம்பரத்துடன் புரபோஸ் செய்ததே ஆனந்த் அம்பானிதான் என்கிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications