ஆடி காரில் மகள் சம்பவம்.. பெண் ஐஏஎஸ் பூஜா கேத்கரின் அம்மாவின் கையில் என்ன அது... மிரளும் மக்கள்
மும்பை: இன்னும் பணியில் முழுமையாக சேராத பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியான பூஜா கேத்கரைச் சுற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த சூழலில் அவரது தாயார் மனோரமா கேத்கர் புனேவில் விவசாயிகளை கை துப்பாக்கியை காட்டி மிரட்டிய பழைய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்ற பூஜா கேத்கர், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்ட உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை அவர் பயன்படுத்துவதாக சர்ச்சைகள் வெடித்தது. பூஜா தனக்கு சொந்தமான ஆடி காரில் மகாராஷ்டிர அரசு என்ற பலகையும் சிவப்பு-நீல சைரன் விளக்கும் பயன்படுத்தியது பூதாகரம் ஆனது.

இது ஒருபுறம் எனில் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், தனது யுபிஎஸ்சி வேட்புமனுவில் நான் கிரிமிலேயேர் என்று கூறிய நிலையில், அவருக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் எப்படி நான் கிரிமிலேயராக வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேபோல் யுபிஎஸ்சி தேர்வின்போது கற்றல் குறைபாடு உள்ளிட்டபல்வேறு குறைபாடுகள் இருப்பதாகக் கூறி சிறப்புச் சலுகைகளை பூஜா பெற்றுள்ளார். எனினும் இதுகுறித்த மருத்துவ சரிபார்ப்புக்கும் அவர் செல்லவில்லை. இதுவும் பூஜா கேத்கருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய அரசு உறுப்பினர் குழுவை அமைத்திருக்கிறது. இந்தக் குழு இரண்டு வாரங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. அதன்பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பது தெரியவரும்.

இந்த சூழலில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியுமான பூஜா கேத்கரின் தந்தை திலீப் கேத்கர், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள் முல்ஷி தாலுகாவில் 25 ஏக்கர் நிலத்தை வாங்கி சொத்து குவித்துள்ளதாக சொல்கிறார்கள். அங்கு திலீப் கேத்கர் விவசாயிகளின் நிலத்தை அதிகரிக்க முயன்றதாகவும், பக்கத்தில் உள்ளவர்களின் நிலத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்க முயற்சித்ததாக கூறி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதேநேரம் ஏதோ காரணத்தால் புகார் அளிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள்.
Manorama Khedkar, mother of the infamous IAS officer Pooja Khedkar, was witnessed arrogantly challenging police personnel and reporters, while also making legal threats, following her attempt to take over land using a gun and private hired bouncers. It appears that the entire… pic.twitter.com/ZkuQnNRfNJ
— Vaibhav Kokat (@ivaibhavk) July 12, 2024
இதுபற்றி வைபவ் கோடக் என்ற பத்திரிக்கையாளர் ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர், "ஒட்டுமொத்த குடும்பமும் நேர்மையற்ற வகையிலும் மற்றும் சட்டவிரோதமான செயல்களிலும் ஈடுபட்டுள்ளது போல் தெரிகிறது. மத்திய அரசு, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறை அதிகாரிகள் இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்
இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி நெட்டிசன்கள் மகாராஷ்டிரா மாநில அரசிடம் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், "இது மிகவும் தீவிரமான விஷயமாகத் தெரிகிறது. ஐஏஎஸ் அதிகாரியின் குடும்பத்தினர் கடுமையான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?" என்று கேட்டுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "ஐயா மகாராஷ்டிரா முதல்வர் அவர்களே, இந்தப் பெண்மணிக்கு எந்த அடிப்படையில் ஆயுதம் கிடைத்தது என்பதை தயவு செய்து விசாரிங்க.. அவர் கைத்துப்பாக்கியை சுட்டிக் காட்டிய விதம் மிகவும் அச்சமாக இருக்கிறது" என்று கூறினார். இன்னொரு நெட்டிசன் பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரை டேக் செய்து இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications