மகராஷ்டிரா தேர்தல் முடிவு: மண்ணை கவ்விய விசிக! எல்லா தொகுதியிலிலும் நோட்டாவுக்கு கீழ்! திருமா ஷாக்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் அந்த தேர்தலில் தமிழகதத்தை சேர்ந்த அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 10 தொகுதிகளில் போட்டியிட்டனர். போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளையே விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். குறிப்பாக அவுரங்காபாத் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெறும் 57 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா யுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் நேற்று முன் தினம் மொத்தம் உள்ள 288 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், ஏத்நாத் ஷிண்டே சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவர் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டன.
காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 95 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் சரத் பவர் பிரிவு 86 இடங்களிலும் வேட்பாளர்களை களம் இறக்கின. கடந்த 20ஆம் தேதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 220 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளது. இந்த தேர்தலில் தமிழக அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 10 தொகுதியில் போட்டியிட்டனர். அதன்படி, கங்காபூர், பத்நாபூர், நன்டெட் (தெற்கு), ஹிங்கோலி,கல்மனுரி, வாஸ்மாட், தெக்லூர், அவுரங்காபாத் (கிழக்கு), முள்ளன்ட்(மும்பை), கன்னட் விசிக வேட்பாளர்கள் களமிறங்கினர்.
ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் படுதோல்வியை சந்தித்துள்ளனர். குறிப்பாக நோட்டாவுக்கு கீழேயே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாக்குகள் கிடைத்துள்ளது.
மேலும் அவுரங்காபாத் ( கிழக்கு) தொகுதியில் வெறும் 57 வாக்குகளை மட்டுமே விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பெற்றுள்ளார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் 93,273 வாக்குகள் பெற்ற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்கிரன் வெறும் 57 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதே தொகுதியில் நோட்டா 1289 வாக்குகள் பெற்றது.
இதே போல், பிம்ரி சட்டமன்றத் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அண்ணா தாது ஒரு லட்சத்து 9 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ராகுல் மல்ஹாரி வெறும் 351 வாக்குகள் பெற்றார். நோட்டாவுக்கு 4000 வாக்குகள் கிடைத்தது.
போகர்தான் தொகுதியில் பாஜக வேட்பாளர் தண்டி சந்தோஷ், சுமார் ஒரு லட்சத்து 27 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் விசிக வேட்பாளர் சுனில் லக்ஷ்மன் ராவ் வெறும் 97 வாக்குகள் மட்டுமே பெற்றார். அந்த தொகுதியில் நோட்டாவுக்கு 722 வாக்குகள் கிடைத்தது.
இதேபோல பூலாம்பரி தொகுதியில் பாஜக வேட்பாளர் அனுராதா சுமார் 1.20 லட்சம் வாக்குகள் பெற்று நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கைலாஷ் சந்திரா வெறும் 216 வாக்குகள் பெற்றார் நோட்டாவுக்கு 824 வாக்குகள் கிடைத்திருந்தது. இதேபோல மகாராஷ்டிரா தேர்தலில் விசிக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் நோட்டாவுக்கும் கீழ் வாக்குகளை பெற்றிருக்கிறது. மொத்தமாகவே 2000 வாக்குகளை கூட அந்த கட்சி மகாராஷ்டிரா மாநிலத்தில் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications