எங்களுக்குதான் முதல்வர் பதவி.. பாஜக ஆதரவு இல்லாமலும் ஆட்சி அமைக்க முடியும்: சிவசேனா மிரட்டல்
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் பதவி தங்களுக்குத்தான் என்பதில் எந்த சமரசமும் செய்ய மாட்டோம்; பாஜக ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கவும் முடியும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவின் சமமான அதிகாரப் பகிர்வு நிபந்தனைகளால் புதிய ஆட்சி அமைக்க முடியாமல் பாஜக தவித்து வருகிறது. 105 இடங்களில் வென்ற பாஜகவுக்கு ஆட்சி அமைக்க மேலும் 41 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. சுயேட்சைகள் மற்றும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களைக் கொண்டு பாஜக ஆட்சி அமைக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆளுநர் கோஷரியாலை நேற்று சிவசேனா, பாஜக தலைவர்கள் தனித்தனியே சந்தித்தனர். இச்சந்திப்புகளில் அரசியல் பேசவில்லை என இருதரப்பும் கூறியுள்ளது. அதேபோல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராதவ் சந்தித்தார்.

சரத்பவாருடன் சந்திப்பு
அவரும் இச்சந்திப்பு மரியாதை நிமித்தனமானது; தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தோம் என்று மட்டும் கூறினார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது. இதனிடையே சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

எங்களுக்கே முதல்வர் பதவி
சிவசேனாவைச் சேர்ந்தவர்தான் முதல்வர் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சிவசேனாவில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான மூன்றில் 2 பங்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவை பாஜக இல்லாமலேயே பெறவும் முடியும்.

சமமான அதிகாரப் பகிர்வு
மகாராஷ்டிராவில் சமமான அதிகாரப் பகிர்வு கொண்ட அரசு அமைப்பது என்பதை தேர்தலுக்கு முன்பே பேசி முடித்துவிட்ட ஒன்று. அதனடிப்படையில்தான் புதிய அரசும் அமைய வேண்டும்.

வியாபாரிகளா?
மகாராஷ்டிரா மக்களும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வராக வேண்டும் என விரும்புகின்றனர். பாஜக முன்வைக்கும் அமைச்சர்கள் பதவி சலுகைகளைப் பெற எங்கள் தலைவர்களும் தொண்டர்களும் வியாபாரிகள் அல்ல.

சுழற்சி முறையில் முதல்வர் பதவி
சுழற்சி முறையிலான முதல்வர் பதவி என்பதை பாஜக தலைவர் அமித்ஷாவும் தேவேந்திர பட்னாவிஸும் முந்தைய பேச்சுவார்த்தைகளின் போது ஏற்றுக்கொண்டதுதான். ஆகையால் எங்களுடைய நிபந்தனைகளில் நாங்கள் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப் போவது இல்லை. இவ்வாறு சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications