மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக தலைவர்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை- சிவசேனாவின் சஞ்சய் ராவத்

Google Oneindia Tamil News

மும்பை: பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என சிவசேனாவின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்த தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை சிவசேனா கடுமையாக விமர்சித்து வருகிறது.

We never made any derogatory remarks against PM Modi and Amit Shah, says Sanjay Raut

நாங்கள் மறைந்த பால்தாக்கரே குறித்து எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. சமமான அதிகாரப் பகிர்வு என்கிற பேச்சுவார்த்தை என் முன்னிலையில் நடைபெறவில்லை என்றார் பட்னாவிஸ்.

பட்னாவிஸின் இந்த கருத்துக்கு சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி, அமித்ஷாவை நாங்கள் விமர்சிக்கவில்லை.

தாக்கரே அப்படி பேசுவார் என்று நினைக்கவில்லை.. பட்னாவிஸ் வருத்தம்.. பெரிதாகும் சிவசேனா பாஜக மோதல்!தாக்கரே அப்படி பேசுவார் என்று நினைக்கவில்லை.. பட்னாவிஸ் வருத்தம்.. பெரிதாகும் சிவசேனா பாஜக மோதல்!

சமமான அதிகாரப் பகிர்வு குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது தேவேந்திரா பட்னாவிஸ் இல்லை என்றார். முன்னதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் சஞ்சய் ராவத் சந்தித்து பேசினார்.

மகாராஷ்டிராவில் புதிய அரசு அமையாமல் முட்டுக்கட்டை நீடித்து வரும் நிலையில் பாஜக-சிவசேனா இரு கட்சி தலைவர்களும் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

English summary
Shiv Sena Senior leader Sanjay Raut said that "We never made any derogatory remarks against Prime Minister Modi and Union Minister Amit Shah".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X