ரஜினி போல அங்கிட்டு மிதுன் சக்கரவர்த்தி-மே.வங்க தேர்தலை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் சந்திப்பு
மும்பை: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பாலிவுட் நடிகரும் மாஜி அரசியல்வாதியுமான மிதுன் சக்கரவர்த்தியை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று மும்பையில் சந்தித்து பேசினார்.
பாலிவுட் உச்ச நட்சத்திரமான மிதுன் சக்கரவர்த்தி மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ராஜ்யசபா எம்.பி.யானார்.
பின்னர் உடல்நிலையை காரணம் காட்டி ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். சர்ச்சைக்குரிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் விளம்பர தூதராக செயல்பட்டதால் மிதுன் சக்கரவர்த்தியும் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

மே.வங்க தேர்தல்
பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார் மிதுன் சக்கரவர்த்தி. தற்போது மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் எப்படியும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்கிற படுதீவிர முனைப்பில் பாஜக இருந்து வருகிறது.

மிதுன் சக்கரவர்த்தி- பகவத் சந்திப்பு
இந்த நிலையில் மும்பையில் மிதுன் சக்கரவர்த்தியை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று சந்தித்து பேசினார். மேற்கு வங்க தேர்தலை முன்னிட்டு பாஜகவில் மிதுன் சக்கரவர்த்தி இணையலாம் எனவும் கூறப்படுகிறது; அதற்கு முன்னோட்டமாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது என்கின்றன தகவல்கள்.

பாஜகவில் சேரவில்லை
ஆனால் எதையும் யூகிக்காதீர்கள்; அப்படியான எதுவும் நடைபெறவில்லை. லக்னோவில் ஏற்கனவே மோகன் பகவத்தை சந்தித்திருக்கிறேன். என்னுடைய வீட்டுக்கு வருமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்றுதான் அவர் வருகை தந்தார் என்கிறார் மிதுன் சக்கரவர்த்தி.

ரஜினி- மிதுன்சக்கரவர்த்தி
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் நடிகர் ரஜினிகாந்தை இறக்க பாஜக படுதீவிரமாக முயற்சித்தது. ஆனால் கொரோனாவை முன்வைத்து அரசியலுக்கே நான் வரவில்லை என ரஜினிகாந்த் ஒதுங்கிக் கொண்டார். இப்போது மேற்கு வங்க தேர்தலுக்காக மிதுன் சக்கரவர்த்தியை வைத்து பாஜக ஸ்கெட்ச் போடுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications