Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. கணவருக்கு பாயாசம் போட்ட தலைமை ஆசிரியை.. மாணவனுடன் சேர்ந்து ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டம் சவுசாலா வனப்பகுதியில் கடந்த 15-ந் தேதி ஆசிரியர் சாந்தனு அரவிந்த் தேஷ்முக் என்பவரின் உடல் கிடந்தது. அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தபோது, மனைவியின் பின்னணி குறித்து தெரியவந்தது. கணவருக்கு பாயாசம் போட்டது என்பது அவரது மனைவியான தலைமை ஆசிரியை நிதி தேஷ்முக் என்பது பின்னணியில் மாணவர்கள் சிலரும் இருப்பதும் தெரியவந்தள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டம் சவுசாலா வனப்பகுதியில் கடந்த மே 15-ந் தேதி பாதி எரிந்த நிலையில் ஆண் உடல் இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மீட்கப்பட்டவரின் உடல், யவத்மால் சுயோக்நகரை சேர்ந்த 32 வயதாகும் ஆசிரியர் சாந்தனு அரவிந்த் தேஷ்முக் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். ஆசிரியரின் மனைவி நிதி தேஷ்முக்கிடம்(24) விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

What action did the headmistress take against her husband who returned home intoxicated near Mumbai

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்கள். இதில் சினிமா கதையை மிஞ்சும் வகையில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஆசிரியர் சாந்தனு அரவிந்த் தேஷ்முக்கும், நிதி தேஷ்முக்கும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இதனால் இரு வீட்டாரும் இவர்களின் காதலை ஏற்கவில்லை. ஆரம்பத்தில் ஆசிரியர்களின் காதல் திருமணம் இனிதே இருந்தது. திருமண வாழ்க்கையின் வசந்த காலமாக ஆரம்ப காலங்கள் இருந்தது. சாந்தனு அரவிந்த் தேஷ்முக் ஆசிரியராக வேலை செய்த பள்ளியில், மனைவி நிதி தேஷ்முக் தலைமை ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

சந்தோஷமாக இருந்த தம்பதி வாழ்க்கையில் மதுப்பழக்கம் எமனாக மாறியது. ஆசிரியர் ர் சாந்தனு அரவிந்த் தேஷ்க் நண்பர்களின் சகவாசத்தால் மது பழக்கத்துக்கு அடிமை ஆனார். தினமும் மது குடித்துவிட்டு வர தொடங்கினார். ஒரு கட்டத்தில் தலைமை ஆசிரியையான தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டம் வரை பொறுத்து பொறுத்து போன தலைமை ஆசிரியை, கணவரை தீர்த்துக்கட்டும் மனநிலைக்கு மாறினார். இதற்காக ஆன்லைனில் தேடிப்பார்த்து மாத்திரைகள் குறித்து தெரிந்து கொண்டார். கடந்த 13-ந்தேதி அவர் சத்து மாத்திரைகள் எனக்கூறி மாத்திரையை கணவருக்கு கொடுத்தார். அதை சாப்பிட்ட கணவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

தனியாக உடலை எப்படி அப்புறப்படுத்துவது என நினைத்த நிதி தேஷ்முக், தனக்கு உதவி செய்யுமாறு தன்னிடம் டியூசன் படிக்கும் சிறுவர்களிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார். அவரின் பேச்சில் ஈர்க்கப்பட்ட சிறுவர்கள் 3 பேர் உடலை அப்புறப்படுத்த உதவி செய்தனர். சம்பவத்தன்று அவர், சிறுவர்கள் உதவியுடன் சவுலாசா வனப்பகுதியில் கணவரின் உடலை வீசினார்.

கணவரின் உடல் போலீசுக்கு கிடைத்தாலும், அடையாளம் கண்டுபிடிக்கக்கூடாது எனக்கருதிய தலைமை ஆசிரியை மறுநாள் இரவு மீண்டும் சிறுவர்களுடன் வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் கணவரின் உடலை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து விட்டு வீடு திரும்பி உள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எரியாமல் இருந்த சட்டை துணியை வைத்துதான் ஆசிரியரை போலீசார் கண்டுபிடித்தனர். அதை வைத்து தான், அவர் ஆசிரியர் சாந்தனு அரவிந்த் தேஷ்முக் என அடையாளம் கண்டார்கள். இறுதியில் தலைமை ஆசிரியை நிதி தேஷ்முக் சிக்கி கொண்டார், அவருக்கு உடந்தையாக இருந்த 3 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+