ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு முன் நடந்தது என்ன? சக போலீஸ் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ரயிவே பாதுகாப்பு படை வீரர் உயர் அதிகாரி மற்றும் 3 பயணிகளை சுட்டுக்கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு முன்பு என்ன நடந்தது என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படை வீரர் உயர் அதிகாரி, 3 பயணிகளை சுட்டு கொலை செய்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு முன்பாக என்ன நடைபெற்றது என்பது தொடர்பான பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஜெய்ப்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் நேற்று அதிகாலை 2.53 மணிக்கு வந்துள்ளது. அப்போது, அதன் பாதுகாப்பு பணியில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் திகாராம் மீனா தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் சேத்தன் சிங், நரேந்திர பார்மர், அமே ஆச்சர்யா ஆகியோர் ஏறியுள்ளனர். இவர்கள் அதற்கு முந்தைய நாள் தாதர் - போர்பந்தர் ரெயிலில் சூரத் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்து இருக்கிறார்கள்.
ரயில் குஜராத் மாநிலம் வல்சாட் வந்த போது, சேத்தன் சிங் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் சப்-இன்ஸ்பெக்டர் திகாராம் மீனாவிடம் கேட்டுள்ளார். உடனே சக பாதுகாப்பு படை வீரர்கள் சேத்தன் சிங்கை ஓய்வு எடுங்கள் என்று கூறியுள்ளனர். மேலும் அவரது ஏ.ஆர்.-எம்.1 ரக நவீன துப்பாக்கியையும் வாங்கியுள்ளனர். சக காவலர்கள் சொன்னதை கேட்காமல் தன்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு உதவி சப்-இன்ஸ்பெக்ரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
இதனால், மாற்று வீரரை பணிக்கு அனுப்ப வலியுறுத்தி கட்டுப்பாட்டு அறைக்கு செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே தனக்கு உடல்நிலை சரியாகவிட்டது, தொடர்ந்து பணி செய்ய விரும்புகிறேன் என சேத்தன் சிங் கூறியுள்ளார். இதனால், அவரை பணி செய்ய அனுமதித்து இருக்கிறார்கள். மேலும் தனது துப்பாக்கியை பாதுகாப்பு படை வீரர்களிடம் இருந்து அடம் பிடித்து வாங்கியிருக்கிறார்.
இதைதொடா்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் ரோந்து பணிக்கு சென்று விட்டனர். ரயிலானது பால்கர், வைத்தர்னா ரயில் நிலையம் அருகே வந்த போது, சேத்தன் சிங் 20 தோட்டாக்கள் உள்ள தனது துப்பாக்கியை எடுத்து உயர் அதிகாரி திகாராம் மீனாவை சரமாரியாக சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனிடையே, சேதன் சிங் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்கான சிகிச்சையை பெற்று வந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications