வாசலில் எட்டி எட்டி பார்த்த மணமகள்.. மாப்பிள்ளைக்கு வந்த செம டென்ஷன்.. கடைசியில்தான் ட்விஸ்ட்டே..!
: மணமேடைக்கு தாமதமாக மாப்பிள்ளை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
மும்பை: விடிகாலை 4 மணிக்கு தாலி கட்ட வேண்டியிருந்த நிலையில், மணமகனுக்காக மணமகள் நீண்ட நேரம் மணமேடையில் காத்திருந்த சோக சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது.உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் நடத்தப்படும் திருமணங்கள் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக விளங்குகின்றன.
அந்த வகையில், ஒருசில வருடங்களுக்கு முன்பு, இங்கு ஒரு கிராமத்தில் திருமணம் நடக்கவிருந்தது.. ஆனால், இந்த திருமணத்துக்கு மணமகன் தாமதமாக வந்துவிட்டார்..

கண்டிஷன்
அந்த கிராமத்தின் விதிமுறைகள்படி, ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரூ.100 என்ற வீதத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது... இதேபோல இன்னும் ஏராளமான கட்டுப்பாடுகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுகின்றன.. கடைசியில் கல்யாணமே நடக்காமல், அந்த மணமகன் தாமதமாக வந்ததற்காக ஃபைன் செலுத்திவிட்டு போனார்... அதுபோன்றே மீண்டும் ஒரு சம்பவம் இதே மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது.

திருமணம்
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் மல்காப்பூர் பங்கரா கிராமத்தில் கடந்த 22ந்தேதி திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. இதற்காக மாலை 4 மணி நல்ல நேரம் என்று குறிக்கப்பட்டு இருந்தது... இதனை தொடர்ந்து அன்றைய தினம், மண்டபத்தில் திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டன. உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ உட்கார்ந்திருந்தனர்.

மாப்பிள்ளை
மணமகள் அலங்காரத்துடன் மேடையேறினார்.. ஆனால் மாப்பிள்ளையை காணவில்லை.. 3 மணிக்கே மணமகள் வந்துவிட்டார்.. ஆனால், மணி 4, 5 மணி ஆகியும் மாப்பிள்ளை மண்டபத்துக்கே வரவில்லை.. இதனால், வாசலில் எட்டி பார்த்து கொண்டேயிருந்தார் மணமகள்.. அவரது குடும்பத்தினரோ டென்ஷன் ஆகிவிட்டார்கள்.. பதைபதைப்புடன் மண்டபத்தையே சுற்றி சுற்றி வந்தனர்.. சம்பந்தப்பட்ட மாப்பிள்ளையோ, நண்பர்களுடன் சேர்ந்து தண்ணி அடித்து கொண்டிருந்தார்.. ஒரே கும்மாளமும், கொண்ட்டாடமுமாக இருந்தாரே தவிர, தாலி கட்டுவதையே மறந்துவிட்டார். நண்பர்களும் மாப்பிள்ளைக்கு மேல் போதையில் திளைத்து இருந்துள்ளனர்...

கொந்தளிப்பு
கடைசியில் 4 மணிக்கு தாலி கட்ட வேண்டியவர், போனால் போகட்டும் என்று 8 மணிக்கு மண்டபத்திற்கு நண்பர்கள் புடைசூழ போதையில் வந்து சேர்ந்துள்ளார்., ஆனால், ஏற்கனவே பொறுமையிழந்துபோய் கொந்தளிப்பில் இருந்த மணமகளின் அப்பா, திருமணத்துக்கு வந்திருந்த தன்னுடைய உறவுக்காரர்களிடம் கலந்து பேசி, இன்னொரு மாப்பிள்ளையை அதே மண்டபத்தில் தேர்ந்தெடுத்து, தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்.

கட்டினார்
பெண்ணுக்கு இன்னொருத்தர் தாலி கட்டியது தெரிந்ததும் மணமகன் கோபப்பட்டுள்ளார்.. பெண்ணின் தந்தையை தாறுமாறாக திட்டினார்.. ஆனாலும் அவர் எதையும் காதில் வாங்கவேயில்லை.. தன் பெண்ணுக்கு வேறு திருமணம் செய்ததை பற்றி அவர் சொல்லும்போது, "ஏப்ரல் 22ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது... மணமகன் குடும்பத்தினர் குடித்துவிட்டு, டான்ஸ் ஆடுவதில் பிஸியாக இருந்தனர். .. 4 மணிக்கு கல்யாணம் நடந்திருக்க வேண்டும்.. ஆனால் அவர்கள் வந்து சேர்ந்தது 8 மணிக்கு... அதனால், என் மகளை என்னுடைய உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டேன்" என்றார்.












Click it and Unblock the Notifications