விராட் கோஹ்லி- அனுஷ்கா சர்மாவின் குட்டி தேவதை வாமிகா.. இந்த பெயருக்கு அர்த்தம் தெரியுமா?
மும்பை: கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியின் குழந்தையின் பெயருக்கு அர்த்தம் என்ன என்பது குறித்து ஜோதிடர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு அனுஷ்கா கர்ப்பம் தரித்தார்.
அவர் யோகா செய்யும் படங்கள், மருத்துவமனைக்கு செக்கப்புக்கு செல்லும் புகைப்படங்கள் வைரலாகின. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி விராத் கோஹ்லி தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

மூத்த வீரர்கள்
ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்காக சில போட்டிகளை விளையாடிய விராத் கோஹ்லி மனைவி அனுஷ்காவின் பிரசவ தேதி நெருங்கியதை அடுத்து விடுப்பு எடுத்துக் கொண்டார். இதை மூத்த வீரர்கள் சிலர் வரவேற்றனர், சிலர் விமர்சித்தனர். மேலும் கோஹ்லி தலைமையில் இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றது.

மும்பை
இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் வரவேற்பையும் எதிர்ப்பையும் தெரிவித்து வந்தார்கள். இந்த நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த 11 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா மும்பையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

புகைப்படம்
முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தையும் சமூகவலைதள பக்கத்தில் அனுஷ்கா சர்மா பதிவு செய்துள்ளார். குழந்தைக்கு வாமிகா (Vamika) என பெயரிட்டுள்ளார்கள். வாமிகா என்பது சமஸ்கிருத பெயராகும். இது கடவுள் துர்க்கையை குறிக்கிறது.

சக்தி, வலிமை
ஆங்கில எழுத்துகளில் விராட் கோஹ்லியின் முதல் எழுத்தில் வரும் V மற்றும் அனுஷ்கா சர்மாவின் பெயரில் கடைசி இரு எழுத்துக்களான Ka- வை இணைந்து பெயர் வைத்துள்ளனர். எண் கணிதம் முறைப்படி இதன் கூட்டுத் தொகை 3 என்றும் கணக்கிடப்படப்பட்டுள்ளது. இந்த பெயர் சக்தி மற்றும் வலிமையைக் குறிக்கிறது.

செல்வாக்கு
அதே நேரம் இந்த குழந்தை பெற்றோருக்கு அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டியதற்காக செல்வாக்குமிக்க பெயராகும். வாமிகா என்ற பெயர் வெற்றிகளையும் அமைதியையும் குறிக்கிறது. அவள் எங்கு சென்றாலும் செழிப்பையும் செல்வத்தையும் கொண்டு வருவாள். இந்த பெயர் வங்காளத்திலும் மலையாள கலாச்சாரங்களிலும் பிரபலமானது என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications