விராத் கோஹ்லி- அனுஷ்கா சர்மாவின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா.. என்ன பெயர்?

Subscribe to Oneindia Tamil

மும்பை: விராட் கோஹ்லி- அனுஷ்கா சர்மா தம்பதி தங்கள் குழந்தையின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட்டனர். இதை பார்த்துவிட்டு இருவரின் ரசிகர்களும் தம்பதியையும் புதுவரவையும் வாழ்த்தி வருகிறார்கள்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு அனுஷ்கா கர்ப்பம் தரித்தார்.

அவர் யோகா செய்யும் படங்கள், மருத்துவமனைக்கு செக்கப்புக்கு செல்லும் புகைப்படங்கள் வைரலாகின. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி விராத் கோஹ்லி தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணிக்கு தலைமையேற்ற கோஹ்லி ஒரு நாள் போட்டி, டி20 தொடர் முடிந்த பின்னர் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் கோஹ்லி விளையாடினார். அனுஷ்கா சர்மாவின் பிரசவ தேதி நெருங்கியதால் அவருடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்தார்.

குழந்தைக்கு பெயர் சூட்டல்

குழந்தைக்கு பெயர் சூட்டல்

இந்த நிலையில் இருவருக்கும் கடந்த 11 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த அறிவிப்பை மட்டும் வெளியிட்ட தம்பதி கிட்டதட்ட 20 நாட்களாக எந்த ஒரு அப்டேட்டுகளையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் அண்மையில் குழந்தைக்கு பெயர் சூட்டுவிழாவையும் நடத்தியுள்ளார்கள்.

வேற லெவல்

வேற லெவல்

அந்த புகைப்படத்தை இன்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்கள். குழந்தையின் பெயர் வாமிகா. இதுகுறித்து அனுஷ்கா சர்மா கூறுகையில் காதல் , நன்றி ஆகியவற்றுடன் நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். தற்போது இந்த குட்டி வாமிகா எங்கள் வாழ்வை வேறு ஒரு லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டாள்.

கண்ணீர்

கண்ணீர்

கண்ணீர், சிரிப்பு, கவலை, பேரின்பம் ஆகியவை சில நிமிடங்களில் உணர்ந்தவை. தூக்கம் குறைவாக உள்ளபோதிலும் எங்கள் இதயங்கள் நிரம்பியுள்ளன. அனைவரின் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி என அனுஷ்கா போட்ட பதிவிற்கு விராத் கோஹ்லி பதில் அளிக்கையில் எனது மொத்த உலகமும் ஒரே ஃபிரேமில் உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+