சுஷாந்த் சிங் சொல்லிக் கொடுத்த முத்தான விஷயங்கள்.. Chhichhore மறந்தது ஏனோ?.. ரசிகர்கள் குமுறல்
மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தான் நடித்த படங்கள் மூலம் பல்வேறு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்துள்ளார்.
Recommended Video
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நேற்று தனது மும்பை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்புக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நன்கு படித்தவர், நல்ல நடிகர் இவற்றை எல்லாம் தாண்டி இந்த சிறிய வயதில் தனது படங்கள் மூலம் நமக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்துள்ளார். அவற்றை நெட்டிசன்கள் நினைவுக்கூர்ந்து வருகிறார்கள்.
வேறு ஒரு ரயிலில் ஏறிவிட்டாயே சுஷாந்த்.. சுஷாந்த் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த டாப் 5 படங்கள்!

நடிப்பு
எம்எஸ் தோனி அன்டோல்டு ஸ்டோரி மூலம் வாழ்க்கையில் எதையும் விட்டு கொடுக்கக் கூடாது என கற்றுக் கொடுத்துள்ளார். விளையாட்டுத் துறை தொடர்பான இந்த படத்தில் டோனியாக சுஷாந்த் சிங் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த படம் 2016-ஆம் தேதி எடுக்கப்பட்டது. இந்த படத்தை பார்த்து இவரை தோனியே பாராட்டியிருந்தார்.

சுஷாந்த் சிங்
அதை போல் கேதார்நாத் என்ற படத்திலும் சுஷாந்த் நடித்திருந்தார். அதில் மதங்களை பொருட்படுத்தாமல் தன்னலமற்றவர்களாக இருந்துவிடுங்கள் என்பதன் கதை சுருக்கம்தான் இந்த படம். இது 2018-இல் எடுக்கப்பட்டது. இதில் இந்து மதத்தைச் சேர்ந்த பணக்கார பெண்ணுக்கும் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஏழை ஆணுக்கும் இடையே மலரும் காதலை பற்றிய கதையாகும்.

கதையின் கரு
இதைத் தொடர்ந்து இவர் கடைசியாக நடித்த படம் சிக்சோரே என்ற படமாகும். இந்த படம் 2019-ஆம் ஆண்டு வெளியானது. பிளாக்பஸ்டர் படமான இந்த படம் ரூ 215 கோடி வசூலை அள்ளியது. இந்த படத்தில் தற்கொலைக்கு எதிராக எப்படி போராடி வெல்ல வேண்டும் என்பதை வலியுறுத்திய கதையாகும்.

வாழ்க்கை
இதுபோல் வாழ்க்கைக்கு தேவையான பாடங்களை நமக்கு கற்றுக் கொடுத்த சுஷாந்த் நேற்று தனது கடைசி படத்தின் கருவை மறந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வேதனையை அளிப்பதாக திரைத்துறையினர் தெரிவிக்கிறார்கள். சிரஞ்சீவி சார்ஜா, சுஷாந்த் ஆகிய இரு இளம் நடிகர்களின் இழப்பை திரையுலகினரால் ஜீரணிக்கவே முடியவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications