"நம்பிக்கை துரோகம்!" அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த சரத் பவார்! ஒவ்வொரு வார்த்தையும் நறுக்! நோட் பண்ணுங்க
மும்பை: மகாராஷ்டிராவில் என்சிபி கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், நாசிக்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சரத் பவார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசியலில் கடந்தாண்டு முதலே யாருமே எதிர்பார்க்காத காட்சிகள் நடந்து வருகிறது. கடந்தாண்டு வரை அங்கே தாக்ரே தலைமையில் சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வந்தது.
கடந்தாண்டு ஷிண்டே தலைமையில் திரண்ட அதிருப்தியாளர்கள் பாஜகவுடன் கை கோர்த்தனர். ஷிண்டே முதல்வராகவும் பதவியேற்றார். இதற்கிடையே இப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு சூழல் மகாராஷ்டிர மாநிலத்திலும் நடந்துள்ளது.

சரத் பவார்: தேசியவாத காங்கிரஸில் சரத் பவார் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய அஜித் பவார், திடீரென பாஜக- சிவசேனா கூட்டணியில் இணைந்துள்ளார். அஜித் பவாருக்கு துணை முதல்வர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் தாங்கள் தான் ரியல் என்சிபி கட்சி என்றும் இரு தரப்பினரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக அவர்கள் தேர்தல் ஆணையத்திடமும் சென்றுள்ளனர்.
கடந்தாண்டு சிவசேனாவில் எப்படி நடந்ததோ.. அதேபோன்ற காட்சிகளே இப்போது என்சிபி கட்சியிலும் நடந்து வருகிறது. இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் அஜித் பவாருக்கு செக் வைக்கும் விதமாக அங்கே மாநிலம் முழுக்க மிகப் பெரிய சுற்றுப் பயணத்தை சரத் பவார் நடத்துகிறார்.
அதன் அடிப்படையில் நேற்று மகாராஷ்டிரா நாசிக்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சரத் பவார் அதிரடி உரையை நிகழ்த்தினார். தனது மருமகன் அஜித் பவாரை குறிப்பிட்ட சரத் பவார், பொது வாழ்க்கையில் யாரை நம்பக்கூடாது என்று என்று விமர்சித்துப் பேசினார்.
மிகப் பெரிய தவறு: இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "நான் சிலரை நம்பி மிகப் பெரிய தவறை செய்துவிட்டேன். நான் மீண்டும் இந்த தவறை செய்ய மாட்டேன்" என்று அஜித் பவாரை குறிப்பிட்டுப் பேசினார். முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த அஜித் பவார், சராத் பவாருக்கு 82 வயது ஆவதாகவும் எப்போது தான் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரோ என்பது போலப் பேசியிருந்தார். இதற்கிடையே அதற்கும் நக்கலகிட்டும் விதமாக சரத் பவார் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "மொரார்ஜி தேசாய் பிரதமரான போது அவருக்கு என்ன வயது என்று தெரியுமா? நான் பிரதமராகவோ அல்லது அமைச்சராகவோ ஆக விரும்பவில்லை. மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்ய மட்டுமே விரும்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சொன்னதை மேற்கொள் காட்டி, நான் சோர்வடையவும் இல்லை ஓய்வு பெறவும் இல்லை என்றும் சரத் பவார் தெரிவித்தார்.
ஓய்வு பெற முடியாது: மேலும், "என்னை ஓய்வு பெறச் சொல்ல அவர்கள் யார்? என்னால் இன்னும் அரசியலில் இருக்க முடியும்" என்றும் அவர் பதிலடி கொடுத்தார். சரத் பவாரின் மகனாகப் பிரிக்காமல் போனதாலேயே கட்சியில் ஓரங்கட்டப்பட்டதாக அஜித் பவார் கூறியிருந்த நிலையில், இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த சரத் பவார், "உண்மையில் இது குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. குடும்ப பிரச்சனைகளை வெளியில் பேசுவது எனக்குப் பிடிக்காது" என்று சொல்லி முடித்துக் கொண்டார்.
அதேநேரம், அஜித் பவார் அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் ஆக்கப்பட்டார் என்று குறிப்பிட்ட சரத் பவார், ஆனால் தனது மகள் சுப்ரியா சுலேவுக்கு அமைச்சர் பதவி எல்லாம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
கடந்த வாரம் யாருமே எதிர்பார்க்காத வகையில் அஜித் பவார் உட்பட 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இதற்கிடையே சரத் பவார் மாநிலம் முழுக்க சுற்றுப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக நாசிக்கில் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள அவர், மாநிலத்தில் பல இடங்களுக்கும் செல்லவிருக்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications