"முத்திருச்சே".. பாஜகவின் ஓட்டைகள் அம்பலம்.. "விபச்சாரத்தில்" குஜராத் பெண்கள்? கேட்பது யார்னு பாருங்க
மும்பை: குஜராத்தில் சட்டப்படி ஆட்சி நடந்தால் காணாமல்போன பெண்களுக்கு நீதி கிடைக்கும். இல்லாவிட்டால், பெண்கள் காணாமல் போனதற்கும் பெண்கள் கடத்தப்பட்டதற்கும் நேரு, காந்தி குடும்பத்தினர் தான் காரணம் என்று சொல்லி குற்றம் சாட்டப்படுவார்கள்.. இது பாஜகவின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது" என்று உத்தவ் தாக்கரே கட்சி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
2 நாட்களுக்கு முன்பு, என்சிஆர்பி என்று சொல்லப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது.. அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் 40,000-க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியிருக்கிறது.

மாயமான பெண்கள்: என்சிபிஆர் வெளியிட்ட தரவுகளின்படி, 2016-ல் 7,105 பெண்களும், 2017-ல் 7,712 பெண்களும், 2018 ம் ஆண்டில் 9,246 பெண்களும், 2019-ல் 9,268 பெண்களும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டில் 8,290 பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும், மொத்தம் 41,621 பெண்கள் காணாமல் போயுள்ளதாக என்சிஆர்பி வெளியிட்டுள்ள தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபச்சாரம்: இதுபற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் சொல்லும்போது, "காணாமல் போன வழக்கை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வழக்குகள் கொலை வழக்குகளைப் போலவே தீவிரமானவை ஆகும். ஒரு குழந்தை காணாமல் போனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்காக வருடக்கணக்கில் காத்திருக்கிறார்கள். போலீஸ் அமைப்பு இதுபோன்ற வழக்குகளை தள்ளுபடி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
காணாமல் போன சிறுமிகள் மற்றும் பெண்களின் புகார்களில் பெரும்பாலானவை மனித கடத்தல் தொடர்பானவை ஆகும். பெண்கள் மாயமான வழக்கு, கொலை வழக்கிற்கு சமமானது. ஆனால் இந்த விஷயத்தில் போலீசார் போதுமான அக்கறை காட்டுவதில்லை. மாயமாகும் பெண்களில் பலரும் பாலியல் தொழிலுக்காக வெளிமாநிலங்களுக்கு விற்கப்படுகின்றனர். சிறுமிகள் கொத்தடிமைகளாக விற்கப்படுகின்றனர். இதுபோன்ற ஏராளமான வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன" என்றனர்.

என்ன காரணம்: இதை பற்றி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஹிரேன் பேங்கர் சொன்னபோது, "கேரளா பெண்களை பற்றி பாஜக தலைவர்கள் விமர்சிக்கிறார்கள். ஆனால், நாட்டின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான குஜராத்தில் 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளனர்" என்று சாடியிருந்தார்.
'தி கேரளா ஸ்டோரி' படத்தின் பரபரப்பு இன்னமும் குறையாமல் உள்ள நிலையில், அந்த படத்தின் சலசலப்பும், சர்ச்சைகளும் தினம் தினம் வெடித்து கிளம்பி வரும்நிலையில், குஜராத் பெண்கள் மாயமான தகவலும் மேலும் அதிர்ச்சியை தந்து வருகின்றன.. அத்துடன், நாட்டை ஆளும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால் அந்த மாநிலத்தில் அதிக அளவில் பெண்கள் மாயமாகி இருப்பது பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், உத்தவ் பாலாசாகிய தாக்கரேவும் இந்த விவகாரம் தொடர்பாக கடுமையாக விமர்சித்துள்ளார்.. அவரது விமர்சனமானது, சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவிலும் வெளிவந்திருக்கிறது.

பெரிய ஓட்டைகள்: "குஜராத் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜகவின் மிகப்பெரிய ஓட்டைகளை அம்பலப்படுத்தி இருக்கிறது தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள். ஐந்தாண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகி இருக்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சிக்கான ஒரே முன்மாதிரி மாநிலம் குஜராத் தான் என்று பாஜக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது.. சர்வதேச தலைவர்களும். டெல்லிக்கு மும்பைக்கும் வருவதற்கு முன்பாகவே குஜராத்துக்கு அழைத்து செல்லப்படுகின்றார்கள்.
பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத் "சொர்க்கம்" என்கிற எண்ணமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது காணாமல் போன பெண்கள் குறித்த தரவு அம்மாநிலத்தின் இருண்ட பக்கத்தையே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது..
குஜராத்தில் சட்டப்படி ஆட்சி நடந்தால் காணாமல்போன பெண்களுக்கு நீதி கிடைக்கும். இல்லாவிட்டால், பெண்கள் காணாமல் போனதற்கும் பெண்கள் கடத்தப்பட்டதற்கும் நேரு, காந்தி குடும்பத்தினர் தான் காரணம் என்று சொல்லி குற்றம் சாட்டப்படுவார்கள். மராட்டிய மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் 70 பெண்கள் காணாமல் போவதாக தகவல் வருகின்றன .
விளாசல்கள்: கடந்த 3 மாதங்களில் மட்டும், கிட்டத்தட்ட 5500 பெண்கள் காணாமல் போயுள்ளார்கள்.. காணாமல் போன பெண்களை கண்டுபிடிக்க அரசு விசாரணை நடத்துவதற்கு அமைப்புகளை பயன்படுத்த வேண்டும். இனியாவது, அரசியல் எதிரிகளை குறி வைப்பதை விட்டுவிட்டு, காணாமல் போன பெண்களை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்ட வேண்டும்" என்று கடுமையாக விளாசி இருக்கிறார் உத்தவ் பாலாசாகிய தாக்கரே.. இதற்கு பாஜக தரப்பு என்ன பதிலடியை தரப்போகிறதோ தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications