9 நிமிடத்தில் 20 கிமீ.. சைரஸ் மிஸ்திரி காரை ஓட்டிய "மர்ம" பெண்.. யார் இந்த அனஹிதா? பரபர பின்னணி
மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி பலியான நிலையில், இந்த காரை ஓட்டியது யார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் நேற்று பலியானார். நேற்று குஜராத்தில் இருந்து மும்பைக்கு இவர் காரில் சென்று கொண்டு இருந்த போது விபத்தில் சிக்கினார்.
இவரின் விபத்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2012 - 2016 வரை டாடா நிறுவனத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி பணியாற்றி வந்தார்.

கார்
இந்த நிலையில் இந்த காரை ஓட்டியது யார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. சைரஸ் காரை ஓட்டியது அனஹிதா என்ற பெண். இவர் மும்பையை சேர்ந்த டாக்டர். இவர் 2004ல் பார்சி பிரிவினருக்காக ஒரு இயக்கத்தை தொடங்கினார். அதில் பார்சி பிரிவினரின் மக்கள் தொகை குறைவதை தடுக்கும் வகையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வந்தார். முக்கியமாக பார்சி பெண்கள் கருத்தரிப்பதற்கான ஆலோசனைகளை அனஹிதா வழங்கி வந்தார்.

என்ன ஆனது?
பார்சி பிரிவினருக்கு இனப்பெருக்க ரீதியாக இலவச சிகிச்சைகளையும் இவர் வழங்கி வந்து இருக்கிறார். இவர் சைரஸ் மிஸ்ட்ரி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். அதேபோல் மருத்துவ துறையில் இவர் பல்வேறு ஆராய்ச்சிகளையும் செய்து வந்தார். முக்கியமாக உடலில் செய்யப்படும் எண்டோஸ்கோபி சோதனை குறித்தும் பல ஆய்வுகளை செய்து வந்தார். தனிப்பட்ட வகையில் மும்பையில் இருக்கும் தேவையில்லாத போஸ்டர்களை நீக்க வேண்டும் என்று இவர் ஒரு பக்கம் போராடி வந்தார்.

யார் இவர்?
இவர் தனது கணவர் டைரியுஸ் பண்டோல் என்பவருடன்தான் அந்த காரில் சென்று கொண்டு இருந்தனர். டைரியுஸ் பண்டோல் இதில் முன் சீட்டில் இருந்தார். மனைவி அனஹிதா காரை ஓட்டிக்கொண்டு இருந்தார். டைரியுஸ் பண்டோலின் அப்பா சமீபத்தில் இறந்துவிட்டார். அவரின் வீட்டில் நடந்த பூஜைக்காக இவர்கள் குஜராத் சென்றனர். குஜராத்தில் இருந்து திரும்பி வரும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பின்னணி
டைரியுஸ் பண்டோல் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். அனஹிதாவிற்கும் விபத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு கை, கால் எலும்புகள் முறிந்து உள்ளன. இவர் சைரஸ் மிஸ்திரி சென்ற கார் Mercedes-Benz GLC SUV கார் ஆகும். கார் மிக வேகமாக சென்ற காரணத்தால் அது விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. உதாரணமாக கடைசி 20 கிலோ மீட்டர் தூரத்தை இந்த கார் வெறும் 9 நிமிடத்தில் தாண்டி இருக்கிறது. அந்த அளவிற்கு வேகமாக சென்றது சிசிடிவி காட்சி மூலம் தெரிய வந்துள்ளது. மணிக்கு சுமார் 132 கிலோ மீட்டர் வேகத்தில் கார் சென்றுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications