முஃபாஸாவுக்கு போட்டியாக சிம்பாவாக கர்ஜித்த ஆர்யான் கான்.. ஷாரூக் மகனின் பரபர பின்னணி இதுதான்!
மும்பை: உல்லாச கப்பலில் போதைப் பொருள் பார்ட்டி நடத்தியதாக போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரால் விசாரணை செய்யப்படும் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கான் யார் என்ற விவரங்கள் தற்போது தேடு பொருளாகியுள்ளது.
Recommended Video
பாலிவுட் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் ஷாரூக் கான். இவரது மகன் ஆர்யான் கான். இவர் நேற்று மும்பை கடலோரத்தில் உல்லாசக் கப்பலில் நடைபெற்ற போதைப் பொருள் பார்ட்டியை நடத்தியதாக ஆர்யானிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆர்யானின் போனை பறிமுதல் செய்து நடத்தப்படும் இந்த விசாரணையில் தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தான் ஒரு முக்கிய பிரமுகர் என்ற முறையில் மும்பையில் உள்ள உல்லாச கப்பலுக்கு வந்ததாகவும் ஆர்யான் தெரிவித்ததாக தகவல்கள் எழுந்துள்ளன.

ஷாரூக் கான்
தற்போது ஆர்யான் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஷாரூக் கான்- கவுரி கான் தம்பதியின் முதல் மகன் ஆர்யான் கான். இவருக்கு சுகானா கான் என்ற சகோதரியும் அப்ராம் என்ற சகோதரனும் உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த புகழ்பெற்ற அனிமேஷன் திரைப்படமான லயன் கிங்கின் இந்தி பதிப்புக்கு சிம்பா என்ற கதாபாத்திரத்திற்கு ஆர்யான் குரல் கொடுத்துள்ளார்.

ஐசிசி
அவரது குரல் ஷாரூக்கின் குரல் போன்று இருந்ததாகவே ரசிகர்கள் தெரிவித்தனர். 2019 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை தொடரின் போது மைதானத்தில் இந்திய ஜெர்ஸி வண்ணத்தில் அணிந்திருந்த டி ஷர்ட்டு அணிந்து கொண்டு ஆர்யான் எடுத்த புகைப்படத்தையும் ஷாரூக் கான் வெளியிட்டிருந்தார். அதில் ஷாரூக்கான் முஃபாஸா என பெயரிடப்பட்ட ஜெர்சியையும் ஆர்யான் சிம்பா என எழுதப்பட்டிருந்த ஜெர்சியையும் அணிந்திருந்தனர்.

ஷாரூக்கான்
தி லயன் கிங் திரைப்படத்தில் சிம்பாவின் தந்தை சிங்கத்தின் பெயர் முஃபாஸா ஆகும். ஆர்யானின் தந்தை ஷாரூக்கான் பெரிய திரை நட்சத்திரமாக விளங்கினாலும் அவரது மகன் ஆர்யானுக்கு நடிப்பதில் ஆர்வம் இருக்கவில்லை. ஆர்யானுக்கு படங்களை இயக்குவதில்தான் ஆர்வம் அதிகம் என ஷாரூக்கானே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். தனது மகள் சுஹானாவுக்கு நடிப்பதில் ஆர்வம் அதிகம் என்றும் இதற்காக அவர் பயிற்சி பள்ளியில் படித்துள்ளார் என்றும் தெரிவித்த ஷாரூக், இளைய மதன் அப்ராமின் விருப்பம் என்னவென தெரியவில்லை. அவர் அழகாக இருப்பதால் ராக் ஸ்டாராக நடிப்பில் ஜொலிப்பார் என ஷாரூக் கான் தெரிவித்தார்.

ஜெயாபச்சன் கையில் குழந்தை
கபி குஷி கபி காம் என்ற படத்தில் ஆர்யான் கான் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அந்த படத்தில் ஜெயாபச்சன் வைத்திருந்த குழந்தை ஆர்யான்தான். இவர் ஷாரூக் கான்- ப்ரீத்தி ஜிந்தா நடித்த கபி அல்விடா நா கெஹ்னா என்ற படத்திலும் நடத்திருந்தார். அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா நவேலி நந்தா, ஆர்யானுக்கு நெருங்கிய தோழியாவர். இருவரும் டேட்டிங் சென்றதாக வதந்திகள் பரவியன. ஆனால் அவர்கள் இருவரும் டேட்டிங் செல்லவில்லை, வெளியேதான் சென்றார்கள், இருவரும் நல்ல நண்பர்கள் அவ்வளவுதான் என குடும்பத்தினர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications