Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

17 வயது பெண்ணுக்கு வந்த குபீர் "ஆசை".. விழி பிதுங்கிய காதலன்.. சொல்ல சொல்ல கேட்கல.. பாவம் அந்த பையன்

Subscribe to Oneindia Tamil

மும்பை: 17 வயது பெண்ணின் பிடிவாதம், ஒரு உயிரையே அநியாயமாக பறித்துவிட்டது.. அப்படி என்ன நடந்தது மகாராஷ்டிரா மாநிலத்தில்?

சதாரா மாவட்டம், தாஹிவாடி என்ற இடத்தை சேர்ந்தவர் பாபு காலே.. 18 வயதாகிறது.. இப்போதுதான் 12ம் வகுப்பு முடித்துள்ளார்.. இனிமேல்தான், காலேஜ் சேர போகிறார்.

Who is this Maharashtra 17 year Old Minor Girl and why did 18 year old boy take this sudden decision

கல்லூரியில் முதன்முதலாக சேர்ந்து படிக்க போவதால், பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார்.. இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்தார்.. அந்த பெண்ணும், இவர் வீட்டுக்கு பக்கத்தில் வசிப்பவர்தானாம்.

கல்யாண ஆசை: என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அந்த பெண்ணுக்கு கல்யாண ஆசை வந்துவிட்டது.. எனவே, திடீரென பாபுவிடம் சென்று, தன்னை இப்போதே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பாபு, இப்போதுதான் காலேஜ் சேரப்போகிறேன்.. காலேஜ் படிப்பை முடித்ததுமே கல்யாணம் செய்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனாலும் சிறுமி கேட்கவில்லை.. அடிக்கடி பாபுவிடம் கல்யாண பேச்சை எடுத்து வந்துள்ளார்.. ஒவ்வொருமுறையும் பாபுவும், அந்த பெண்ணை சமாதானம் செய்து, அவரது வீட்டுக்கு அவரை அனுப்பி வைத்துள்ளார்.


தகராறு:
நேற்றைய தினமும் பாபுவின் வீட்டுக்கு வந்துவிட்டார் அந்த சிறுமி. உடனே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று மறுபடியும் தகராறு செய்திருக்கிறார்.. இதைப்பார்த்து பாபுவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

இந்த முறை பாபுவின் பெற்றோர்களே, அந்த சிறுமியிடம் சமாதானம் செய்தார்கள். ஆனாலும், கல்யாணம் இப்பவே நடந்தாக வேண்டும், இல்லாவிட்டால் தன்னுடைய வீட்டுக்கு போக முடியாது, கல்யாணம் நடக்கும்வரை இங்கேயேதான் இருப்பேன் என்று பிடிவாதம் பிடித்துள்ளார்.

இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்த பெற்றோர், அந்த பெண்ணை உட்கார வைத்து பொறுமையாக பேசினார்கள்.. நீண்ட நேரமாக பேசி சமாதானமும் செய்தார்கள்..

மன உளைச்சல்: அதற்கு பிறகு, அந்த பெண் அரைமனதுடன் அங்கிருந்து கிளம்பி அவருடைய வீட்டுக்கு சென்றார்.. ஆனால், இதெல்லாம் பார்த்து பாபு, கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டார்.. அந்த சிறுமி அவரது வீட்டுக்கு சென்றதுமே, பாபு தன்னுடைய அறைக்கு சென்று கதவையும் உள்பக்கமாக பூட்டிவிட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கதவை உடைத்துக்கொண்டு குடும்பத்தினர் செல்வதற்குள் பாபு பிணமாகிவிட்டார்.. இதற்குபிறகு, பாபுவின் சடலத்தை கண்டு பெற்றோர் கதறி அழுதது காண்போரை உலுக்கி எடுத்தது.. பிறகு, போலீசாருக்கு தகவல் தந்ததையடுத்து, அவர்கள் விரைந்து வந்து, பாபுவீன் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப்போது, தற்கொலைக்கு தூண்டியதாக அந்த சிறுமி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.. அந்த பெண்ணை விசாரித்தும் வருகிறார்கள்..

அதிர்ச்சி: 17 வயது பெண்ணுக்கு எதற்காக இந்த திடீர் திருமண ஆசை வந்தது என்று தெரியவில்லை.. கடைசியில் ஒரு உயிரையே பறித்துவிட்டது.. அத்துடன், காலேஜில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற பாபுவின் கனவுகளும் காற்றிலே கரைந்துப்போயவிட்டது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+