Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"லீலை".. தோட்டத்தில் புகுந்த ஜோடி.. புரண்டு புரண்டு அழுதே "சிக்கிய" புது பொண்டாட்டி.. பரிதாப மாப்ளை

Subscribe to Oneindia Tamil

மும்பை: தோட்டத்துக்கு வீட்டுக்கு போயாக வேண்டும் என்று ஆசை ஆசையாக கேட்டார் இளம்மனைவி.. புதுபொண்டாட்டி என்பதால், அவர் ஆசைப்படியே அந்த தோட்டத்துக்கு அழைத்து சென்றிருக்கிறார் கணவர்.. அப்பறம் என்னாச்சு?

மகாராஷ்டிர மாநிலம் புனே பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது... அந்த இளைஞர் பெயர் சுராஜ் ராஜேந்திரா.. டேட்டா ஆபரேட்டராக வேலை பார்த்து வருபவர்.

 Who is this Pune woman and why did newly married woman take this sudden decision

சுராஜுக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது.. மனைவி பெயர் அங்கிதா.. அங்குள்ள கனுஜ் என்ற பகுதியை சேர்ந்தவர் அங்கிதா... 2 வீட்டு பெரியவர்களும் பார்த்து ஏற்பாடு செய்த கல்யாணம் இது.. சிறப்பாக கல்யாணம் நடந்து முடிந்த நிலையில், புதுமண தம்பதி இருவருமே கோயில்களுக்கு சென்று வந்தனர்.. சாமி தரிசனமும் செய்து வந்தனர்.

தோட்டத்து வீடு: அப்படித்தான், புனே புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் பிரதி ஷீர்டி கோயிலுக்கு சம்பதி சகிதமாக சென்றனர்... இந்த கோயிலில் இருந்து ஒன்றரை கிமீ தொலைவில்தான், அங்கிதா குடும்பத்துக்கு சொந்தமான தோட்டம் ஒன்று இருக்கிறது.. அதனால் இந்த கோயிலுக்கு போய்விடு, அப்படியே தோட்ட வீட்டுக்கும் போய்விட்டு வரலாம் என்று அங்கிதா கேட்டிருக்கிறார்..

புதுமனைவி இப்படி ஆசையாக கேட்டதுமே, அதற்கு உடனே சம்மதித்தார் சுராஜ்.. இருவருமே கோயிலுக்கு போனார்கள்.. பிறகு அங்கிருந்து தோட்ட வீட்டுக்கும் போனார்கள்.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம், அங்கிதாவின் அப்பாவுக்கு தன் மகளிடமிருந்து அவசர அவசரமாக போன் பறந்தது.. தோட்டத்தில் திடீரென முகமூடி கொள்ளையர்கள் வந்துவிட்டதாகவும், தங்களை தாக்கி சென்றதாகவும், அந்த சுராஜ் சுருண்டு விழுந்து இறந்து போனதாகவும் அங்கிதா கதறி அழுதிருக்கிறார்...

கதறி அழுதனர்: இதைக்கேட்டதும் பதறியடித்து கொண்டு அங்கிதாவின் அப்பா ஓடிவந்துள்ளார்.. அப்படியே, சுராஜ் குடும்பத்துக்கும், போலீசுக்கும் தகவல் சொல்லி உள்ளார்.. மொத்த பேரும் தோட்டத்து வீட்டுக்கு திரண்டனர்... இறந்து கிடந்த சுராஜ்ஜை பார்த்து, 2 குடும்பத்தினருமே கதறி கதறி அழுதார்கள்.. குடும்பத்தினரை பார்த்துமே அங்கிதா அதற்கு மேல் புரண்டு புரண்டு அழுதார்.. என்ன நடந்தது என்று போலீசார் விசாரித்தனர்.

 Who is this Pune woman and why did newly married woman take this sudden decision

அதற்கு அங்கிதா, "கோயிலில் இருந்து தோட்ட வீட்டுக்கு 2 பேரும் வந்தோம்.. இயற்கை உபாதையை கழிப்பதற்காக நான் வெளியே சென்றிருந்த நேரத்தில், மர்ம நபர்கள் சிலர் சுராஜை தாக்கிக்கொன்றுவிட்டு தப்பிஓடிவிட்டார்கள்" என்று அங்கிதா அழுதுகொண்டே சொன்னார்.. சுராஜ்ஜின் முகத்திலும், தலையிலும், நிறைய கத்திக்குத்து காயங்கள் கிடந்தன.. கழுத்தறுத்துக்கப்பட்டு கிடந்தது..

துருவி துருவி விசாரணை: எனினும், அங்கிதா குறிப்பிட்ட அந்த முகமூடி அணிந்த 3 பேர் குறித்து, மேலும் சில தகவல்களை போலீஸார் துருவி துருவி கேட்டனர்... போலீசாரின் அடுத்தடுத்த கேள்விகளால் அங்கிதா திணறிவிட்டார்.. கடைசியில் தானாகவே போலீஸாரின் வலையில், அங்கிதா சிக்கிவிட்டார்.. முன்னுக்குபின் முரணாக பேசினார்.. உளற ஆரம்பித்தார்..

அதற்கு பிறகுதான், தங்கள் பாணி விசாரணையை போலீசார் ஆரம்பித்தனர்.. இறுதியில் மொத்தத்தையும் சொல்லிவிட்டார்.

அங்கிதா: இந்த கல்யாணமே அங்கிதாவுக்கு பிடிக்கவில்லையாம்.. கல்யாணம் ஆன ஒருசில நாட்களிலேயே, சுராஜை சுத்தமாக பிடிக்கவில்லையாம்.. அளவுக்கு மீறீ அங்கிதாவை நேசித்துள்ளார்.. இதனால் லேசான சந்தேகமும், அங்கிதா தன்னை விட்டு போய்விடக்கூடாதே என்ற கலக்கமும், கணவருக்கு வந்ததாம்.. தன்னை சந்தேகப்பட்ட கணவனை கொலை செய்வது என்று அங்கிதா முடிவெடுத்துள்ளார்.. அதனால்தான், திட்டம்போட்டு இந்த கொலையை நடத்தியதாக போலீசாரிடம் கூலாக சொன்னார்..
இதையடுத்து, அங்கிதாவை போலீஸார் கைது செய்தனர்.. எனினும், அவரால் தனி நபராக கொலையை நிகழ்த்தி இருக்க முடியுமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.. சடலத்தை பார்த்தால், படுகோரமாக சுராஜ் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.. தலையில் மட்டும் ஏகப்பட்ட கத்திக்குத்துக்கள் இருக்கிறதாம்.. அதனால், அங்கிதாவுக்கு வேறு யாராவது உதவி செய்திருப்பார்களா? உண்மையிலேயே 3 பேர் அங்கு வந்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+