பிளானை மாற்றிய பாஜக! மகாராஷ்டிரா வேட்பாளரை கவனிச்சீங்களா? 71 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சான்ஸ்! ஏன்?
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் 99 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 74 சிட்டிங் எம்எல்ஏக்களில் 71 பேருக்கு அப்படியே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக பாஜகவில் ஏராளமான சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு என்பது மறுக்கப்படும் என்ற நிலையில் 71 பேருக்கு மீண்டும் சான்ஸ் கொடுத்திருப்பதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவில் தற்போது பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே இருக்கிறார். துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே இருக்கிறார். மகாராஷ்டிராவிற்கு தற்போது சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடித்து நவம்பர் 23ல் ரிசல்ட் வெளியாக உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்த தேர்தலிலும் பாஜக மீண்டும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து களமிறங்க உள்ள நிலையில் பாஜக சார்பில் இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 13 பெண்கள் உள்பட 99 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் 71 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு சட்டசபை தேர்தலின்போது பாஜக சார்பில் ஏராளமான சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு என்பது வழங்கப்படாது.
கைஓங்கிய காங்கிரஸ்.. மராட்டியத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டி? உத்தவ் - சரத்பவாரை விட அதிகம்
அதிருப்தி இருக்கும் எம்எல்ஏக்களுக்கு பதில் பாஜக வேறு நபர்களை தேர்தலில் களமிறக்கும். ஆனால் தற்போது 99 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் 71 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது. சிட்டிங் எம்எல்ஏக்களாக உள்ள 3 பேருக்கு மட்டும் தான் வாய்ப்பு என்பது மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மும்பையில் பாஜகவுக்கு 16 எம்எல்ஏக்கள்உள்ளன. இதில் 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 99 வேட்பாளர்களில் 71 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி 3 பேருக்கு மட்டும் சான்ஸ் மறுக்கப்பட்டு இருப்பது தான் தற்போது பேசும் பொருளாகி உள்ளது. இதன் பின்னணியில் முக்கிய காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதாவது மகாராஷ்டிராவில் தற்போது சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக உடைந்துள்ளன. சிவசனோ கட்சி சின்னத்துடன் ஏக்நாத் ஷிண்டே பாஜக பக்கம் உள்ளார். அதேபோல் தேசியவாத கட்சி சின்னத்துடன் அஜித் பவார் பாஜகவுடன் நிற்கிறார். மாறாக உத்தவ் தாக்கரே சிவசனோ (யுபிடி) என்ற பெயரிலும், சரத்பவார் , சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் என்ற பெயரிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ளன.
மகாராஷ்டிரா வரலாற்றில் ஒரே நேரத்தில் முக்கிய 2 கட்சிகள் உடைந்தபடி எதிரெதிர் அணிகளில் இருந்து தேர்தலை எதிர்கொள்வது இதுதான் முதல் முறை. இதனால் அரசியல் நிபுணர்களே இந்த தேர்தலில் யார் வெல்வார்கள்? என்பதை கணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பாஜகவும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. பாஜகவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே, சரத்பவார் மற்றும் காங்கிரஸ் என்று கூட்டணி வலுவாக உள்ளது. இதனால் புதியவர்களை களமிறக்கி ரிஸ்க் எடுக்க பாஜக விரும்பாமல் அப்படியே சிட்டிங் எம்எல்ஏக்களை வைத்து வெற்றியை அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இன்று வெளியான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் முதல்வர் அசோக் சவானின் மகளுக்கு பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது. அசோக் சவானின் மகள் ஸ்ரீஜெயா போகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல் மகாராஷ்ரா மாநில பாஜக தலைவராக உள்ள சந்திரசேகர் பவன்குலேவுக்கு காம்தி சட்டசபை தொகுதிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கார்கோபர் மேற்கு தொகுதியில் பாஜகவின் ராம் கதம், சிக்லி தொகுதியில் ஸ்வேதா மஹாலே பாட்டீல், கன்காவ்லி தொகுதியில் நிதிஷ் ரானே உள்ளிட்டவர்கள் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட்












Click it and Unblock the Notifications