கைஓங்கிய காங்கிரஸ்.. மராட்டியத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டி? உத்தவ் - சரத்பவாரை விட அதிகம்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் 260 தொகுதிகளை பகிர்ந்து கொள்வதில் சுமூகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் உத்தவ் தாக்கரே மற்றும் சரத்பவாரை விட காங்கிரஸ் கட்சிக்கு தான் அதிக இடங்கள் வழங்கப்பட உள்ளது. அதோடு மீதமுள்ள 28 தொகுதிகளை பங்கீட்டு கொள்வதில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருகிறது.
மகாராஷ்டிராவில் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 145 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்நிலையில் தான் அங்குள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் 23-ந் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

மகாராஷ்டிராவில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜக கூட்டணியில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். இந்த ஆளும் கூட்டணியில் பாஜக - ஷிண்டே சிவசேனா- அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு ‛மகாயுதி' என பெயரிடப்பட்டுள்ளது.
அதேபோல் எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ்- உத்தவ் தாக்கரேவின் சிவசேனா- சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சி - இடதுசாரிகள் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணி ‛மகா விகாஸ் அகாடி' என அழைக்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தொகுதி பங்கீட்டில் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.
எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான மீட்டிங் நடந்து முடிந்துள்ளது. இதில் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பதோல், பாலாசாகேப் த்ரோட், எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடித்வார் , சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பட்டீல், முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்மூக், முன்னாள் அமைச்சர் ஜிதேந்திரா அக்வாத் மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத் எம்பி மற்றும் அனில் தேசாய் எம்பி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையின்போது எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியில் 260 தொகுதிகளை பகிர்ந்து கொள்வதில் சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி காங்கிரஸ் அதிக தொகுதிகளில் போட்டியிட உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 115 தொகுதிகள், உத்தவ் தாக்கரேவின் சிவசனோவுக்கு 83 முதல் 86 இடங்களிலும், சரத்பாவாரின் தேசியவாத காங்கிரஸ் 72 முதல் 75 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.
அதன்படி மும்பை மற்றும் கொங்கன் பெல்ட் பகுதிகளில் உத்தவ் தாக்கரே கட்சி அதிக இடங்களில் போட்டியிட உள்ளது. இந்த இடங்களில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுக்கு அதிக செல்வாக்கு உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சி விதர்பா மண்டலத்திம், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரா மேற்கு பகுதிகளிலும் அதிக இடங்களில் களமிறங்க உள்ளது.
இதுபற்றி அந்த கூட்டணியின் தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த தலைவர் கூறுகையில், ‛‛சில தொகுதிகளில் போட்டியிட அனைத்து கட்சிகளும் விரும்புகின்றன. இதனால் அந்த தொகுதிகளில் இறுதி முடிவு எடுக்க கூடுதல் நேரம் தேவைப்பட உள்ளது. வெற்றியை மனதில் வைத்து தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன'' என்றார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், ‛‛இந்த கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி, இடதுசாரிகள் கட்சிகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் அமைப்புகளுக்கு தலா 2 முதல் 3 தொகுதிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது2 முதல் 3 தொகுதிகள் சமாஜ்வாதி கட்சிக் மற்றும் இடதுசாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால் மொத்தமுள்ள 288 சட்டசபை தொகுதிகளில் 260 தொகுதிகளில் பகிர்ந்து கொள்வது தொடர்பாக காங்கிரஸ் - உத்தவ் தாக்கரேவின் சிவசேனா - சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அந்தந்த தொகுதிகள் என்னவென்று இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications