குரங்குகள் செய்த அடாவடி.. 250 நாய்களை.. தேடித்தேடி.. சினிமாவில் கூட இப்படி எல்லாம் நடந்தது இல்லையே!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள மஜோல்கான் என்ற பகுதியில் குரங்குகள் கும்பலாக சேர்ந்து செய்த அட்டூழியம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் சமீப நாட்களாக ஆங்காங்கே நாய்கள் இறந்து கிடந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் மஜோல்கான் என்ற கிராமத்தில் ஒரே நாளில் 20 நாய்கள் இறந்த நிலையில் கண்டு எடுக்கப்பட்டது.
இதை பார்த்த மக்களுக்கு ஒரே பதற்றம்.. என்ன செய்வது.. ஏன் இப்படி நடக்கிறது.. ஏதாவது நோய் பரவுகிறதா.. வெளிநாட்டு சதியா என்று அச்சம் அடைந்துள்ளனர். போலீசுக்கு உடனே புகார் அளித்தனர்.

போலீஸ்
இதையடுத்து போலீசார் அப்பகுதி வனத்துறைக்கு தகவல் தெரிவித்து கூட்டு ஆபரேஷனில் களமிறங்கினர். போலீசார் நடத்திய சோதனையில், அப்பகுதியில் இறந்து கிடந்த நாய்களின் உடலில் எல்லாம் அடிப்பட்ட காயம் இருந்தது. மோசமான கீறல்கள் உடலில் இருந்துள்ள. சில நாய்களின் கண்கள் பிடுங்கப்பட்டு இருந்தன.

மோசம்
நாய்களின் உடலில் குரங்குகளின் நக தடம் இருந்ததை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். அதேபோல் அப்பகுதி மக்களும் குரங்குகள் சில நாய்களை தூக்கி சென்றதை கண்டுபிடித்து உள்ளனர். இதையடுத்து அங்கு இருக்கும் 4 கிராமங்களில் வனத்துறை - போலீசார் தரப்பு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டது. பீட் மாவட்டத்தில் பல கிராமங்களில் நாய்கள் மொத்தமாக இல்லாமல் போனது விசாரணையில் தெரிய வந்தது.

கண்டுபிடித்தனர்
இதன்பின்தான் போலீசார் இதன் தீவிரத்தன்மையை உணர்ந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் விசாரணையின் போது குரங்கு ஒன்று நாயை தூக்கி செல்வதை நேரில் பார்த்து உள்ளனர். அப்பகுதி மக்கள் எல்லாம் சேர்ந்து அந்த குரங்கை கல்லால் தாக்கிய நிலையிலும் அந்த குரங்கு நாயை கவ்விக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றது. அதன்பின் அந்த நாய் மாலை நேரத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது.

அதிர்ச்சி
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நாய்கள் எல்லாம் மரத்தில் இருந்தும், உயரமான கட்டிடத்தில் இருந்தும் குரங்குகள் மூலம் தூக்கி வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மோசமாக தாக்கி பின்னர் மரத்தில் இருந்து வீசி நாய்களை குரங்குகள் கொன்றுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 250 நாய்கள் இப்படி பீட் மாவட்டத்தில் கொல்லப்பட்டுள்ளது. வனத்துறை தெரிவித்த தகவலின்படி, குரங்குகள் கும்பல் திட்டமிட்டு இப்படி நாய்களை கொன்றுள்ளது.

பழிக்குப்பழி
ஒரு மாதத்திற்கு முன் குரங்கு குட்டி ஒன்று நாய்களால் அடித்துக் கொல்லப்பட்டது. இதற்கு பழி வாங்கும் விதமாக நாய்களை இப்படி தேடி தேடி குரங்குகள் கொன்றுள்ளன. திட்டமிட்டு குரங்குகள் படத்தில் வருவதை போல செய்துள்ளன என்று வனத்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீம்கள்
நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு குரங்குகளின் இந்த பழி வாங்கும் நடவடிக்கை அமைந்துள்ளது. இணையத்தில் இதையடுத்து #MonkeyVsDoge என்ற டேக் வைரலாகி வருகிறது. குரங்குகள் நாய்களை பழி வாங்குவது போல பல மீம்கள் இதில் பகிரப்பட்டு வருகின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications