நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது ஏன்? நடந்தது என்ன?.. ஆபாச வீடியோ மூலம் கொட்டிய பணம்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் பிரிட்டன் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்டதாக நேற்று நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இந்திய பிரிட்டன் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் 198 ஆவது பணக்கார நபராக ஒரு புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டது. இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2009 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார்.
ஜே எல் மீடியா என்ற பெயரில் மொபைல் செயலியை நிறுவி அதில் வெப் சீரிஸ்களை தயாரித்து வருகிறார் ராஜ். இவர் மும்பையில் கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

கிரிக்கெட் லீக்
இந்திய கிரிக்கெட் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரு பங்குதாரராகவும் இருக்கிறார். இவர் ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்டதாக மும்பை போலீஸாரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

மும்பை குற்றப்பிரிவு
இவர் மீது ஆபாச படங்களை தயாரித்து செயலிகளில் வெளியிடுவதாக கடந்த பிப்ரவரி மாதமே மும்பை குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்ததில் ராஜ் குந்த்ரா முக்கிய குற்றவாளி என தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீஸ் கூறுகிறது.

ராஜ் குந்த்ரா முக்கிய குற்றவாளி
இவருடன் சேர்த்து மாடலும் நடிகருமான கெஹானா வஷிஸ்த் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஆபாச படம் தயாரிப்பதில் பிரிட்டன் நிறுவனத்தின் பங்கு இருப்பதாக தெரியவந்ததை அடுத்து விசாரணையில் அது ராஜ் குந்த்ராவின் நிறுவனம் என தெரியவந்தது.

8 ஆபாச வீடியோக்கள்
அந்த பிரிட்டன் நிறுவனத்தின் இயக்குநர் உமேஷ் காமத் தினந்தோறும் செயலிகள் மூலம் குறைந்தபட்சம் 8 ஆபாச வீடியோக்களையாவது பதிவேற்றம் செய்துவிடுவாராம். இவர் பதிவேற்றம் செய்யும் ஆபாச வீடியோக்களை மொபைல் போனில் பணம் கட்டி பார்க்கக் கூடிய செயலிகளில் மட்டுமே பார்க்க முடியுமாம்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications