போயும் போயும் அந்த கங்கை நதியில் யாராவது குளிப்பாங்களா? ராஜ்தாக்கரே பேச்சால் அதிர்ந்த 'இந்துத்துவா'

Subscribe to Oneindia Tamil

மும்பை: கங்கை நதி அசுத்தமானது; அதில் போய் யாராவது புனித நீராடுவார்களா? கும்பமேளாவின் போது கங்கை நதிநீரை கொண்டு வந்து புனித தீர்த்தமாக குடிக்க சொன்னார்கள்.. நான் மறுத்துவிட்டேன் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே பேசியிருப்பது பாஜக உள்ளிட்ட இந்துத்துவா வட்டாரங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மகாராஷ்டிராவில் இந்துத்துவா சித்தாந்தம் பேசக் கூடிய கட்சிகளில் ஒன்று ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா. சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவின் குடுபத்தைச் சேர்ந்தவர். சிவசேனாவில் இருந்து வெளியேறி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியை நடத்தி வருகிறார். இந்துத்துவா மற்றும் மராத்தி தேசியத்தை முன்வைப்பதுதான் ராஜ்தாக்கரேவின் கொள்கைகள்.

ganga kumbhmela Raj Thackeray

இந்த நிலையில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் 19-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராஜ்தாக்கரே, கங்கை நதியின் தூய்மை குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், அசுத்தமான கங்கை நதியில் யாராவது புனித நீராடுவார்களா? கங்கை நதிநீரை கும்பமேளா காலத்தில் கொண்டு வந்து குடிக்க சொன்னார்கள்.. அந்த நீரை குடிக்க முடியாது என மறுத்துவிட்டேன். ராஜீவ் காந்தி காலத்தில் இருந்தே கங்கையை தூய்மைப்படுத்துதல் தொடர்பான பேச்சுகளை கேட்டு சலித்தும் போய்விட்டது என்றார்.

மேலும் கொரோனா வைரஸ் நம்மை விட்டு போனதாக கூறினாலும் 2 ஆண்டுகளாக முக கவசம் அணிந்தபடியே மக்கள் நடமாடி வந்தனர்; இப்போது அவர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக கும்பமேளா என்ற பெயரில் கங்கையில் புனித நீராடுகின்றனர். அப்படியான நிலையில் கங்கை நதியில் யார் போய்வது புனித நீராடுவது? என்றும் ராஜ்தாக்கரே கேள்வி எழுப்பினார்.

அத்துடன், நம்பிக்கைகள் என்பவை குறைந்தபட்ச அர்த்தமுள்ளவையாக இருக்க வேண்டும்; நாட்டின் ஒரு நதி கூட சுத்தமாக இல்லை; ஆனாலும் நதிகளை தாயாகவே போற்றுகிறோம். வெளிநாடுகளில் நதியை தாயாக போற்றுவதில்லை; ஆனாலும் நதிகளை சுத்தமாகவே வைத்திருக்கின்றனர். நமது நதிகள் அனைத்தும் மாசடைந்துவிட்டன; நதிகளில்தான் குளிக்கின்றனர்; துணி துவைக்கின்றனர் என்றும் விமர்சித்தார் ராஜ்தாக்கரே.

இதே குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகளும் முன்வைத்திருந்தன; ஆனால் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்திருந்தார். தற்போது ராஜ்தாக்கரேவின் இந்த விமர்சனம் பாஜக உள்ளிட்ட இந்துத்துவா வட்டாரங்களை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+