வெனிசுலா போல் மோடியையும் கடத்துவாரா டொனால்ட் டிரம்ப்? காங்கிரஸ் மாஜி முதல்வரின் விபரீத ஆசை.. சர்ச்சை
மும்பை: வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடத்தியதுபோல் பிரதமர் மோடியையும் கடத்தி செல்வாரா? என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவராக பிருத்விராஜ் சவான். இவர் மத்திய அமைச்சராக பணியாற்றி உள்ளார். அதுமட்டுமின்றி கடந்த 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை மகாராஷ்டிரா முதல்வராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர்.

இந்நிலையில் தான் பிரதமர் மோடியை டிரம்ப் கடத்துவாரா? என்று பிருத்விராஜ் சவான் கேள்வி கேட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது படையை அந்த நாட்டுக்கு அனுப்பி கைது செய்தார்.
இந்நிலையில் தான் பிருத்விராஜ் சவான் வெனிசுலாவில் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, ‛‛வெனிசுலாவில் நடந்ததைப்போல் இந்தியாவில் நடக்குமா? டிரம்ப் எங்கள் பிரதமரை கடத்துவாரா?'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அமெரிக்கா - வெனிசுலா அண்டை நாடுகளாகும். இருநாடுகளை கரிபீயன் கடல் பிரிக்கிறது. வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், அமெரிக்காவிற்கும் சட்டவிரோதமாக வெனிசுலாவை சேர்ந்தவர்கள் நுழைவதாகவும் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார். கடந்த சில வாரங்களாக மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.
இந்நிலையில் தான் திடீரென்று டொனால்ட் டிரம்ப் உத்தரவின் அடிப்படையில் வெனிசுலாவின் தலைநகர் கராகஸை குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கிளியா ஃபுளோரஸ் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் தான் வெனிசுலாவை போல் இந்தியாவிலும் பிரதமர் மோடியை டிரம்ப் கைது செய்வாரா? என்று கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
இந்த கருத்துக்கு பாஜகவினர் உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுபற்றி ஜம்மு காஷ்மீரின் முன்னாள் டிஜிபி எஸ்பி வைத் கூறுகையில்,‛‛பிருத்வி சவானின் இந்த கருத்து அவமானமிக்கது. டிரம்ப், வெனிசுலா அதிபர் மதுரோவுக்கு செய்தது போல் பிரதமர் மோடிக்கும் நடக்கும் என்று நினைப்பது நாட்டுக்கே அவமானம். பேசுவதற்கு முன் யோசியுங்கள், பிருத்விராஜ் சவான். அல்லது இதுதான் காங்கிரஸின் உண்மையான கொள்கையா?'' என்று சாடினார்.
மேலும் ‛‛இந்தியா அணுஆயுத பலம் கொண்டது. இந்த வேளையில் இப்படி பிருத்வி ராஜன் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது'' என்று சாடி உள்ளனர். மேலும், பலரும் பிருத்வி சவானை, முட்டாள் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, அமெரிக்கா - இந்தியா இடையே நிலவும் பிரச்சனை பற்றி பிருத்விராஜ் சவான் கூறும்போது, ‛‛50 சதவீத வரி விதிப்பால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்வது சாத்தியமில்லை.இது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்காவுக்கு செல்லும் ஏற்றுமதியை தடுக்கும் முயற்சியாகும்.
நேரடியாகத் தடை விதிக்க முடியாததால், வரிகளை ஓர் தடையாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் இந்தியாவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படும். அமெரிக்காவுடனான ஏற்றுமதியால் கிடைத்த லாபம் இனி இருக்காது. மாற்றுச் சந்தைகளை தேட வேண்டும்'' என்றார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications