Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முகேஷ் அம்பானி, நீதா அம்பானி குடும்பம்.. 15000 கோடி ஆன்டிலியா வீட்டை விட்டு வெளியேறுவார்களா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையின் பரேட் சாலையில் அமைந்துள்ள இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த சொத்துக்களில் ஒன்று எது என்று யாரை கேட்டாலும் சொல்வார்கள் அது முகேஷ் அம்பானி குடியிருக்கும் ஆன்டிலியா என்று.. ஆனால் 15000 கோடி மதிப்புள்ள சொகுசு மாளிகை அடங்கிய இந்த இடத்தை முகேஷ் அம்பானி கடந்த 2002ம் ஆண்டு வக்ஃப் வாரியத்திடம் வெறும் இடமாக வாங்கியதாக ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும் முகேஷ் அம்பானி அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறுவாரா என்று ஆங்கில ஊடகங்கள் கேள்வி எழுப்பி உள்ளன,

மும்பையின் மிக ஆடம்பரமான பங்களா என்றால், முகேஷ் அம்பானி, நீதா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி குடும்பத்துடன் வசிக்கும் ஆன்டிலியா தான். மும்பையில் கும்பலா மலையில் உள்ள ஆடம்பரமான அல்ட மவுண்ட் சாலையில் உள்ள இந்த வீட்டில் 27 மாடிகள் கட்டப்பட்டுள்ளது.

Will Mukesh Ambani and Nita Ambani give up their Antilia house worth Rs 15 000 crore

தலைப்பு செய்தி

நாட்டின் மிகவும் ஆடம்பரமான வசதிகளை கொண்ட வீடான ஆன்டிலியாவின் இன்றைய மதிப்பு ரூ.15000 கோடியாகும்.முகேஷ் அம்பானியின் இந்த வீடு மீண்டும் அங்குள்ள ஆடம்பர வசதிகள்.. இந்தியாவின் மிகப்பெரிய ஆடம்பர மாளிகை, இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் வீடு என்பதை தாண்டி, அந்த வீடு இப்போது வக்பு வாரியத்தின் சொத்து என்ற குற்றச்சாட்டால் மீண்டும் தலைப்புச் செய்தியாகி உள்ளது.

முகேஷ் அம்பானி வீடு

அண்மையில் வக்ஃப் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றpபட்டிருக்கிறது. பின்னர் குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் இதில் முகேஷ் அம்பானியின் வீடு என் இப்போது ஏன் ஆங்கில ஊடகங்களின் தலைப்பு செய்தியில் இடம் பிடித்திருக்கிறது என்றால், முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் ஆன்டிலியா வீடு வக்ஃப் வாரிய நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு தான். மிகவும் பழமையான இந்த சொத்து தொடர்பான பிரச்சனையை முழுமையாக பார்ப்போம்.

ஆன்டிலியா

மும்பையின் பரேட் சாலை பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த சொத்துக்களில் ஒன்று என்றால் அது ஆன்டிலியா தான். இது வக்ஃப் வாரியத்தின் நிலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. டிவி9 ஹிந்தி செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, முகேஷ் அம்பானி 2002 ஆம் ஆண்டு வக்பு வாரியத்திடமிருந்து சுமார் ரூ.21 கோடிக்கு நான்கரை லட்சம் சதுர அடி நிலத்தை வாங்கினாராம்.

கோஜா சமூகம்

கோஜா சமூகத்தைச் சேர்ந்த ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்குவதற்காக ஒரு அறக்கட்டளை செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தான் முகேஷ் அம்பானிக்கு நிலத்தை விற்றதாக கூறப்படுகிறது.

ஆதாரம் இல்லை

ஆனால், மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கை (ATR) படி, வக்ஃப் வாரியத்தின் சொத்தை தனியார் பயன்பாட்டிற்கு விற்க முடியாது என்று வக்ஃப் வாரியம் கூறியதால் நில ஒப்பந்தம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. மேலும், நிலத்தின் முந்தைய உரிமையாளரான கரீம் பாய் இப்ராஹிம், மதக் கல்வி மற்றும் அனாதை இல்லம் கட்டுவதற்காக வக்ஃப் வாரியத்திற்கு நிலத்தை வழங்கியிருக்கிறார். ஆனால் அவர் தானமாக வழங்கிய நிலத்தில் ஆன்டிலியா இல்லை. ஏனெனில் அந்த நிலம் இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரரான முகேஷ் அம்பானிக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


காலி செய்வாரா முகேஷ் அம்பானி

இது தொடர்பான வழக்கு நீண்ட காலமாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, மேலும் தீர்ப்பு அம்பானி குடும்பத்திற்கு எதிராக சென்றால், முகேஷ் அம்பானி குடும்பம் நிலத்தை காலி செய்ய வேண்டியிருக்கும் என்பதுதான் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

Will Mukesh Ambani and Nita Ambani give up their Antilia house worth Rs 15 000 crore


குடியரசுத் தலைவர் ஒப்புதல்

அண்மையில் வரலாற்று நிகழ்வாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடுமையான விவாதங்களுக்குப் பிறகு வக்பு (திருத்தம்) மசோதா, 2025 மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது ஒப்புதலை கடந்த ஏப்ரல் 5ம் தேதி வழங்கினார். இந்த சட்டப்படி, மத்திய அரசு, இந்த சட்டத்தில் 34 பிரிவுகளை திருத்தம் செய்துள்ளது. 3 புதிய பிரிவுகளை புதிதாக சேர்த்துள்ளது. 5 பிரிவுகளை நீக்கி உள்ளது. அதன்படி சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போம். வக்பு சட்டம்-1995 என்பதற்கு பதிலாக ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு சட்டம்-1995 என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் உரிமையாளர்கள்

வக்புக்கு சொத்தினை தானமாக கொடுப்பவர், குறைந்தது 5 ஆண்டுகள் முஸ்லிமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அவர் அந்த சொத்துக்கு உரிமையாளராகவும் இருக்க வேண்டும். அதன்படி வேறு மதத்தினர் மற்றும் 5 ஆண்டுகளுக்குள் முஸ்லிமாக மதம் மாறியவர்கள் சொத்துகள் வக்பு சொத்தாக இனி மாற்ற முடியாது. ஒரு சொத்துக்கு உரிமை இல்லாதவர்கள், வக்புக்கு சொத்து கொடுக்க இயலாது.

கலெக்டர் விசாரணை

ஒரு சொத்தை மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்ததை கொண்டு வக்பு என கூறும் பழைய வரையறை அம்சம் நீக்கப்பட்டிருக்கிறது. அரசு சொத்துகள் எந்த சூழ்நிலையிலும் வக்பு சொத்தாக கருதப்பட கூடாது. அரசு சொத்தை வக்பு உரிமைக்கோரினால், அது தொடர்பாக கலெக்டர் விசாரணை செய்து மாநில அரசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

பத்திரப்பதிவு

முன்னர் ஒரு சொத்தினை வக்பு என்றாலே, அது வக்பு சொத்தாக மாறி விடும். ஆனால் இனி வக்பு சொத்து என்றால் அதற்கு உரிய முறையில் பத்திரப்பதிவு செய்ய வேண்டும். பத்திரப்பதிவு செய்யாத சொத்துகள் வக்பு சொத்துகளாக மாறாது. வக்பு சொத்து பதிவு செய்வதற்கு முன்னர், அந்த சொத்தின் உரிமை மற்றும் தகவல்களை மாவட்ட கலெக்டர் சரிபார்த்து ஒப்புதல் தரவேண்டும்.

வக்பு சொத்து பதிவேற்றம்

வக்பு சொத்து என்றால் அது பத்திரப்பதிவு செய்யப்பட்டு, மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அப்படி செய்யாத சொத்துகள் 'இது வக்பு சொத்து' என்று கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய இயலாது. ஒரு சொத்தை வக்பு சொத்தாக அறிவிக்கும் அதிகாரம் முன்பு வக்பு வாரியத்திற்கு இருந்தது. இது நீக்கப்பட்டுள்ளது. இனி ஒருவர் தனது சொத்தின் உரிமையை நிரூபித்து, அதனை வக்புக்கு பதிவு செய்து கொடுத்தால் மட்டுமே அது வக்பு சொத்தாக தகுதி பெறும். ஒரு நிலம் வக்பு சொத்தாக மாறும் போது, அது குறித்து 90 நாட்களுக்கு முன் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட வேண்டும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+