"ஆயிரம் இருந்தாலும் அவங்க என் அம்மா".. அனாதை ஆசிரமத்தில் சேர்த்த தாயை.. தேடி அலையும் பாசக்கார மகள்
மும்பை: பச்சிளம் குழந்தையாக இருந்த போதே அனாதை ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டு பின் ஸ்விட்சர்லா்து தம்பதியரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட இந்தியப் பெண் ஒருவர், தற்போது தனது ரத்த பந்தமான தாயை தேடி மும்பையில் அலைந்து திரியும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் இருந்து மும்பை வந்திருக்கும் அந்தப் பெண், தனது தாயை பற்றி ஒரு சிறு தகவலும் தெரியாமல், கையில் எந்தவொரு முகவரியும் இல்லாமல் தேடி வருகிறார்.
இருந்தபோதிலும், எப்படியும் தாயை கண்டுபிடித்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் 10 வருடத்துக்கும் மேலாக அவர் தனது தேடும் படலத்தை நடத்தி வருகிறார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் விவரங்களை இங்கு பார்ப்போம்.

அனாதை ஆசிரமத்தில் அடைக்கலம்
ஸ்விட்சர்லாந்தை சேர்ந்தவர் பீனா முல்லர் (44). 1978-ம் ஆண்டு மும்பையில் பிறந்த இவரை, அடுத்த சில தினங்களிலேயே 'ஆஷா சதன்' என்ற அனாதை இல்லத்தில் அவரது தாய் சேர்த்துவிட்டு சென்றுவிட்டார். இதுகுறித்து அப்போது ஆசிரம நிர்வாகிகள் கேட்ட போது, குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாது என அந்தப் பெண் கூறியிருக்கிறார். அதன் பிறகு, அந்தப் பெண்ணை பற்றிய எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அவரும் தனது குழந்தையை பார்க்க வரவில்லை எனக் கூறப்படுகிறது. அந்தக் குழந்தைக்கு ஆசிரமத்தில் உள்ளவர்கள்தான் பீனா முல்லர் எனப் பெயரிட்டனர்.

தத்தெடுத்த ஸ்விட்சர்லாந்து தம்பதியர்
இதனிடையே, பீனா முல்லருக்கு ஒரு வயது நெருங்கும் போது, அவரை ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த குழந்தையில்லா தம்பதியினர் தத்தெடுத்து தங்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். தங்கள் சொந்த மகளை போல பாசம் காட்டி அவர்கள் முல்லரை வளர்த்தனர். பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை முல்லருக்கு தனது பிறப்பு குறித்து எந்த விவரமும் தெரியாமல் இருந்தது. பின்னர், கல்லூரிக்கு செல்லும் போதுதான் சக ஸ்விட்சர்லாந்து மாணவிகளிடம் இருந்து தனது உருவமும், நிறமும் வேறுப்பட்டு இருப்பதை முல்லர் உணர்ந்திருக்கிறார். அதேபோல, தனது பெற்றோரை போலவும் தான் இல்லை என்பதையும் முல்லர் கண்டறிந்தார். இதையடுத்து, தனக்கு உள்ள இந்த சந்தேகத்தை தனது ஸ்விட்சர்லாந்து பெற்றோரிடம் முல்லர் கேட்க, அவர்களும் மழுப்பலாக பதிலளித்து வந்தனர்.

உண்மை தெரிந்தது..
ஆனால் ஒருகட்டத்தில், முல்லரின் இந்தக் கேள்விகள் அவர்களை துளைத்தெடுக்க, அவர்களும் உண்மையை கூறிவிட்டனர். இந்தியாவின் மும்பையில் உள்ள அனாதை ஆசிரிமத்தில் இருந்து, தான் தத்தெடுக்கப்பட்டதை அறிந்த முல்லர் அழுது புலம்பினார். அவரை அவரது வளர்ப்பு பெற்றோர் சமாதானப்படுத்தினர். இருந்தபோதிலும், உண்மை தெரிந்ததால் தனது தாயை பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் எப்படி தேடுவது; எங்கு தேடுவது என்ற எண்ணத்தில் அந்த ஆசையை அவர் விட்டுவிட்டார்.

மும்பையில் தேடி திரியும் முல்லர்
பின்னர் தனது ஆசையை மனதில் வைத்துக்கொண்டு, படிப்பில் கவனம் செலுத்தினார் முல்லர். நன்றாக படித்து அங்குள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பெரிய பதவியில் அவர் அமர்ந்தார். அவருக்கு திருமணமும் நடந்து இரண்டு மகன்களும் பிறந்தனர். அப்போதுதான், கடந்த 2012-ம் ஆண்டு எப்படியாவது தனது தாயை கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் மும்பை வந்திருக்கிறார். தான் தத்து கொடுக்கப்பட்ட அனாதை ஆசிரமத்தில் சென்று விசாரித்தார். அதில் அவரது தாயார் பெயர் ரோபல்லோ என்பதும், அவர் கோவா வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இந்த இரண்டு தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு மும்பையில் கடந்த 10 ஆண்டுகளாக தனது தாயை தேடி முல்லர் அலைந்து திரிந்து வருகிறார். ஆனால் அவரது தாயாரை பற்றிய ஒரு க்ளூவும் அவரு்ககு கிடைக்கவில்லை.

'அம்மா' என அழைக்க வேண்டும்
இதுகுறித்து முல்லர் கூறும்போது, "கடந்த 10 வருடங்களாக மும்பை வருவதும், இங்கு ஆறு மாதக்காலம் தங்கியிருந்து எனது தாயை தேடுவதும், பின்னர் ஸ்விட்சர்லாந்துக்கு செல்வதுமாக எனது வாழ்க்கை ஓடி வருகிறது. ஒரு முறையாவது எனது தாயை பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. அவரை அம்மா என அழைக்க வேண்டும். ஏன் என்னை அனாதை இல்லத்தில் சேர்த்தாய் எனக் கேட்க வேண்டும். இப்போது நான் வசதியாக இருக்கிறேன். ஆனால் என்னை பெற்ற அம்மா எங்கு, எந்த நிலைமையில் இருக்கிறார் என தெரியவில்லை. அவரை ஸ்விட்சர்லாந்துக்கு அழைத்துச் சென்று என் வீட்டில் தங்க வைக்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது. சில வழக்கறிஞர்களும், போலீஸாரும் எனது தாயை தேட எனக்கு உதவி வருகின்றனர்" என கண்ணீர் மல்க அவர் கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications