முதலை தோல் ஜாக்கெட்.. இதைவிடுங்க, ரூ.640 கோடி பங்களா.. வாய் பிளக்க வைத்த ஆனந்த் அம்பானி கல்யாண பரிசு
மும்பை: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வெகுஅமர்க்களமாக நடந்த நிலையில், வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
அம்பானி - நீடாவின் மகன் ஆனந்த், ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் ஜியோ அரங்கில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த கல்யாணத்தில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று சிறப்பித்திருந்தனர்.

அரசியல்வாதிகள்: இந்த மாத துவக்கத்திலிருந்தே, ஒவ்வொரு நாளும் அம்பானி வீட்டில் சடங்குகளும், பூஜைகளும் வெகுஅமர்க்களமாக நடந்தன. இந்த சடங்குகளுக்கு, விஐபிகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.. எனவே, இவர்கள் தினந்தோறும் இரவில் நடக்கும் சடங்குகளில் பங்கேற்று வந்தனர்..
ஆனந்த் அம்பானி அணிந்திருந்த நிகழ்வில், ஜாக்கெட் முதலை தோலினால் செய்யப்பட்டதாம். தன்னை ஒரு விலங்கு விரும்பி என கூறி கொள்ளும் ஆனந்த் அம்பானி, இப்படி முதலை தோலினால் செய்யப்பட்ட ஜாக்கெட்டை அணிந்திருந்ததற்கு பலரும் விமர்சனத்தை முன்வைத்து வந்திருந்தனர். ஆனாலும் அந்த முதலை ஜாக்கெட் 36 லட்சம் ரூபாய் என்றார்கள்.
ஒட்டுமொத்தமாக திருமணத்திற்கு 320 மில்லியன் டாலர் அளவுக்கு அம்பானி செலவு செய்திருப்பதாக சொன்னார்கள்.. எனினும், உலகின் பெரும் பணக்காரர்கள் பலரும் அணிவகுத்து வந்து ஆனந்த் அம்பானியை வாழ்த்தினர். பில் கேட்ஸ், மார்க் ஸக்கர்பெர்க், இந்திய திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் மும்பையில் முகாமிட்டார்கள்.. 3 நாட்கள் நீடித்த திருமண விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து பதினான்காயிரம் பேர் கலந்து கொண்டனர்.
அம்பானி தம்பதி: இந்த திருமணத்துக்கு, முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியினர் கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாயை செலவு செய்ததாக தகவல் வெளியானது. இந்த திருமணம் நடந்து முடிந்தபிறகும்கூட, ஆனந்த் அம்பானியின் திருமணம் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.. இந்த திருமணத்துக்கு புதுமண தம்பதிக்கு கிடைத்த பரிசு பொருட்கள்தான் இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
ஆனந்த் அம்பானிக்கு ரூ.5.42 கோடி மதிப்புள்ள Bentley Continental GTC Speed காரும், அவரது மனைவி ராதிகாவுக்கு ரூ.21.7 கோடி மதிப்புள்ள Cartier brooch மற்றும் ரூ.108 கோடி மதிப்புள்ள முத்து நகைகள், வைர நகைகளை முகேஷ் அம்பானி தம்பதியினர் வழங்கியிருந்தனர்.
மாளிகை: இதைத்தவிர பாம் ஜுமேராவில் 3,000 சதுர அடி பரப்பளவில் ஆடம்பரமான மாளிகையை அம்பானி தம்பதியினர் மணமக்களுக்கு பரிசாக தந்துள்ளனர்.. இந்த மாளிகையில் 10 படுக்கையறைகள் மற்றும் ஒரு தனியார் கடற்கரை உள்ளதாம்... இந்த பங்களாவின் மதிப்பு ரூ. 640 கோடி என்கிறார்கள். ஆனால், திருமணத்துக்கு வந்த பிரமுகர்கள் மணமக்களுக்கு தந்த பரிசுப்பொருட்கள் இதுதான்:
அமேசான் நிறுவன முன்னாள் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப் பெசோஸ் ரூ.11.50 கோடி மதிப்புள்ள புகாட்டி (Bugatti) காரை பரிசாக வழங்கியுள்ளார்.
விமானங்கள்: பிரபல அமெரிக்க நடிகரும், தொழில்முறை மல்யுத்த வீரருமான ஜான் சினா ரூ.3 கோடி மதிப்புள்ள லம்போர்கினியை பரிசாக தந்துள்ளார்.. ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் ரூ.300 கோடி மதிப்புள்ள தனியார் ஜெட் விமானத்தை வழங்கியுள்ளார்.
பில்கேட்ஸ் ரூ.1000 கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தை பரிசாக அளித்தாராம்.. ஆனந்த் மற்றும் ராதிகா ஆகியோருக்கு ரூ.180 கோடி மதிப்பிலான ஆடம்பர படகு ஒன்றை பரிசளித்ததாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.. சுந்தர் பிச்சை ரூ.100 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டரை பரிசாக அளித்ததாகவும் இவாங்கா டிரம்ப் ரூ.80 கோடி மதிப்பிலான ஆடம்பர மாளிகையை வழங்கியதாகவும் தெரிகிறது.
நடிகைகள்: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், மற்றும் விக்கி கவுஷல் போன்றோர் ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை பரிசாக அளித்துள்ளனர்.. சித்தார்த் மல்ஹோத்ரா , கியாரா அத்வானி ரூ.25 லட்சம் மதிப்புள்ள கையால் செய்யப்பட்ட சால்வையையும், அக்ஷய் குமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க பேனாவையும் பரிசாக வழங்கியுள்ளதாக பாலிவுட் செய்திகள் கூறுகின்றன..
ஷாருக்கான் பிரான்சில் ரூ.40 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பை பரிசாக அளித்தாராம்.. பச்சன் குடும்பத்தினர்கள் ரூ.30 கோடி மதிப்புள்ள மரகத அணிகலன் ஒன்றை கிப்ட் செய்தார்களாம்..
வியப்புகள்: ஆலியா பட், ரன்பீர் கபூர் ரூ.9 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் (Mercedes) காரையும், சல்மான் ரூ.15 கோடி மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கையும், உலகிலேயே விலை உயர்ந்த ஒரு கை கடிகாரத்தையும் பரிசாக வழங்கியுள்ளாராம். ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ரூ.20 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரையும் பரிசாக அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஆனந்த அம்பானிக்கு பரிசாகக் கொடுக்கப்பட்ட டார்ட்ஸ் எஸ்யூவி மாடல் குறித்தும் இணையத்தில் ஆர்வமாக பேசபபட்டு வருகிறது.. மெர்சிடீஸ் மேபாக் GLS600 சொகுசு எஸ்யூவியின் கஸ்டமைஸ்டு மாடல் இது என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, தங்க நிறத்திலான மாடலையே ஆனந்த் அம்பானிக்கு பரிசாக கொடுத்திருப்பதாகவும், இந்தக் காரின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ.15 கோடி என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications