'உயர்ந்த' சாதனை.. கின்னஸ் டூ காதல்.. உலகின் குள்ளமான பாடிபில்டருக்கு டும் டும் டும்.. வாவ் லவ் ஸ்டோரி
உலகின் மிகவும் உயரம் குறைவான, கின்னஸ் சாதனை படைத்த பாடிபில்டருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது
மும்பை: உலகின் மிகவும் உயரம் குறைவான மாற்றுத்திறனாளி பாடிபில்டர் ஒருவரின் திருமணம் தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இவர் கின்னஸ் சாதனையையும் படைத்திருக்கிறார்.
மகாரஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீக் விட்டல் மொஹிதே. இவர் உலகில் மிகவும் உயரம் குறைவான மனிதர்களில் ஒருவராவார். இவரது மொத்த உயரம் 3.4 அடிதான். ஆனால் இதனால் இவர் மனஉறுதியை கைவிடவில்லை. அதற்கு மாறாக தன்னிடம் இருக்கும் தனித்திறமையை தேட தொடங்கினார். அந்த வகையில் பல விஷயங்களில் ஈடுபட தொடங்கினார். ஆனால் எதிர்பார்த்து எதுவும் நடக்கவில்லை. எல்லா வேலைகளிலும் இவர் சராசரி மனிதர்களை போலதான் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் நண்பர்கள் உதவியுடன் 'ஜிம்மில்' சேர்ந்தார். உடற்பயிற்சி இவருக்கு அதீத உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இருப்பினும் ஜிம்மில் இருந்து உபகரணங்கள் அனைத்தும் சராசரி மனிதர்களுக்கு ஏற்றார் போல இருந்திருக்கிறது. எனவே இதனை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில நாட்கள் வரை ஜிம்முக்கு போகாமல் இருந்திருக்கிறார். பின்னர் நண்பர்கள் இவருக்கு ஏற்றார் போல உபகரணங்களை வாங்க உதவியுள்ளனர்.

பாடிபில்டர்
இதனையடுத்து மீண்டும் தனது உடற்பயிற்சியை தொடங்கினார். இந்த முயற்சியானது இவரை பாடிபில்டராக உருவாக்கியது. தினமும் இரண்டு வேளை உடற்பயிற்சி புதிய உத்வேகத்தை கொடுக்கவே அவர் போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார். உயரம் குறைவாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பாடிபில்டர் போட்டியில் பங்கேற்ற இவர், "உலகின் மிகவும் குறைவான பாடிபில்டர் போட்டி பங்கேற்பாளர்" என்கிற கின்னஸ் சாதனையையும் படைத்தார். இதன் மூலம் இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது. பெயர், புகழ் என எல்லாம் இருந்தும் இவரின் பெற்றோருக்கு ஒரேயொரு குறை மட்டும் இருந்தது. திருமணம்தான் அந்த குறை.

நிச்சயதார்த்தம்
வயது 27 ஆகிவிட்டது ஆனால் இன்னமும் திருமணம் நடக்கவில்லை என்பது பெற்றோரை வாட்டி வதைக்கவே அவர்கள் தீவிரமாக மணப்பெண் தேடலில் இறங்கியுள்ளனர். அப்படி அறிமுகமானவர்தான் ஜெயா. இவரும் உடல் வளர்ச்சி குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டவர். இவரது மொத்த உயரம் 4.2 அடியாகும். ஜெயாவின் படத்தை பிரதீக்கிடம் காட்டவே இவருக்கும் ஜெயாவை பிடித்துவிட்டது. இதனையடுத்து நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இது குறித்து பிரதீக் கூறுகையில், "நான் பிறந்ததிலிருந்த எனக்குள் எப்போதும் தாழ்வு மனப்பான்மை வந்தது கிடையாது. இதற்கு என்னுடைய நண்பர்கள்தான் காரணம்.

கின்னஸ் சாதனை
நான் ஜிம்மில் சேர்ந்து பாடிபில்டராக உருவானதற்கு நண்பர்கள்தான் தொடக்கமாக இருந்தனர். அதேபோல கின்னஸ் சாதனை குறித்து எனக்க எதுவும் தெரியாது. நான் கேள்வி மட்டும்தான் பட்டிருக்கிறேன். இந்நிலையில் நண்பர்கள்தான் என்னை உற்சாகமூட்டி அதற்காக அப்ளை செய்ய சொன்னார்கள். உதவியும் செய்தார்கள். இப்படிதான் கின்னஸ் சாதனையை படைத்தேன். இதன் பின்னர்தான் திருமணம் பேச்சு அடிப்பட்டது. வீட்டில் ஜெயாவை எனக்கு பெண் பார்த்தார்கள். எனக்கு ஜெயாவை பார்த்தவுடன் பிடித்துவிட்டது. ஜெயாவிடம் நான் பேச தொடங்கியபோது மிகவும் நம்பிக்கையுடன் பேசினேன். ஏனெனில் அவளுக்கும் என்னை பிடிக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது.

திருமணம்
வாழ்க்கையில் எனக்கு கிடைத்த இரண்டு அற்புதமான விஷயங்கள் எது என கேட்டால் ஒன்று கின்னஸ் சாதனையும் அதனை அடைய உறுதுணையாக இருந்த நண்பர்களும்தான். இரண்டாவது என்னுடைய ஜெயா. எங்களுக்குள் நிச்சயமாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் திருமணத்திற்கும் நிச்சயம் நடந்த காலத்திற்கும் இடைப்பட்ட நாட்களில் என்னால் ஒருநாள் கூட ஜெயாவிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் நான் அவளை காதலித்தேன். காதலில் மூழ்குவது என்பது ஒருவித உணர்வு! தற்போது எங்களுக்கு திருமணமாவிட்டது" என்று கூறியுள்ளார். இவர்களின் திருமண வீடியோ இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications