வெடித்து சிதறிய பீரங்கி.. மைசூர் அரண்மனையில் இளைஞர் உடல் முழுக்க பரவிய தீ.. பதற வைக்கும் விபத்து
மைசூர்: கர்நாடகாவில் இருக்கும் புகழ்பெற்ற மைசூர் அரண்மனையில் பயிற்சியின் போது திடீரென பீரங்கி வெடித்துச் சிதறிய ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநில மைசூருவில் ஆண்டுதோறும் தசரா விழா வெகு சிறப்பாக நடைபெறும். அங்குள்ள மைசூர் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் தசரா கோலாகலமாகக் கொண்டாடப்படும்..

அதன்படி இந்தாண்டும் அங்கு தசராவை கோலாகலமாகக் கொண்டாடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. இதனால் அங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த மைசூர் அரண்மனை தசரா விழாவில் பயிற்சியின் போது தான் பீரங்கி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பதற வைக்கும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மைசூர் அரண்மனை: கடந்த அக. 15ஆம் தேதி அங்கே கொண்டாட்டங்கள் தொடங்கியது. இந்த கொண்டாட்டங்கள் நாளையுடன் நிறைவடைகிறது. அதில் யானை அம்பாரி சுமக்கும் நிகழ்வு தான் முக்கியமானது. இது உலக புகழ்பெற்ற நிகழ்வாகக் கருதப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த நிகழ்வைப் பார்க்கப் பொதுமக்கள் மைசூர் அரண்மனைக்கு வருவார்கள்.
அப்போது யானை அம்பாரி சுமக்கும் நிகழ்வின் போது 21 பீரங்கிகள் முழங்கும். அதுவே இந்த கொண்டாட்டத்தின் போது தனிச் சிறப்பாக இருக்கும்.. அதற்கான பயிற்சி நடந்த போது தான் இந்த மோசமான விபத்து அரங்கேறி உள்ளது. பயிற்சியின் போது எதிர்பாராத விதமாகப் பீரங்கி வெடித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஊழியருக்கு வலது கை முழுக்க தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
சிகிச்சை: இதையடுத்து அருகில் இருந்த ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அவரது உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் நிகழ்ச்சிகள் எந்தவொரு தடையும் இல்லாமல் தொடர்ந்து நடக்கும் என்றே தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட்டத்தின் போது மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகளில் வைத்து 21 குண்டுகளை வெடிக்க வைப்பார்கள். பொதுவாகப் பல காலமாக இதில் பயிற்சி பெற்றுத் தேர்ந்தவர்கள் மட்டுமே இந்த பீரங்கியை உபயோகிப்பார்கள். இதுவரை பயிற்சியின் போதும் சரி, விழா நிகழ்வின் போதும் சரி விபத்து நடந்ததே இல்லை. முதல்முறையாக இப்படியொரு விபத்து நடந்துள்ளது.
வீடியோ: இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் வரிசையாக பல பீரங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் ஊழியர்கள் வரிசையாகக் குண்டுகளைப் போட்டு தயார் நிலையில் வைக்கிறார்கள். வேறு சில ஊழியர்கள் கையில் சிறு தீப்பந்தம் போன்ற ஒன்றை எடுத்து வந்து அவற்றைப் பற்ற வைக்கிறார். அப்போது ஒரு பீரங்கியை அவர் பற்ற வைக்க முயன்ற போது தான் இந்த விபத்து நடந்துள்ளது
பீரங்கியை அவர் பற்ற வைத்த போது திடீரென எதிர்பாராத விதமாக அது அப்படியே வெடித்துள்ளது. இதனால் பீரங்கியை சுற்றி தீ ஏற்படவே அருகில் இருந்த அந்த நபருக்கு மோசமான காயம் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. விபத்து நடந்த போது அக்கம் பக்கத்தில் ஆட்கள் இருந்ததால் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மைசூர் அரண்மனையில் பொதுவாக மன்னர் காலத்தில் கொண்டாடப்பட்டது போல ஆயுத பூஜைகள் கொண்டாடப்படும். பட்டத்து யானைகள் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் அரண்மனைக்கு அழைத்து வருவார்கள்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications