காவிரி: தமிழ்நாட்டுக்கு எதிராக நடிகர் நடிகைகளை இழுத்துவிடும் கன்னட விவசாயிகள்- போர்க்களமான மாண்டியா!
மைசூர்: தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடகாவின் மாண்டியாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்காக போராட நடிகர் ,நடிகைகள் களமிறங்கிவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் கன்னட விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டுக்கான உரிய காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

கருகும் குறுவை பயிர்கள்:காவிரி மேலாண்மை ஆணையமும் 2 முறை காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட உத்தரவிட்டது. கர்நாடகாவோ, காவிரி நீரை திறக்கிறோம் என்ற பெயரில் குறைவான நீரையே தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடி காய்ந்து கொண்டிருக்கிறது.
டெல்லியில் டேரா: மேலும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். கர்நாடகாவின் அனைத்து கட்சி எம்.பிக்களை அழைத்துக் கொண்டு காவிரி பிரச்சனையில் மத்திய பாஜக அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
கர்நாடகா மனு: அத்துடன் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு தடை கேட்டும் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

தொடரும் மாண்டியா போராட்டம்: இதுஒருபுறம் இருக்க, கர்நாடகாவின் மாண்டியாவில் கன்னட விவசாயிகள் 2 வாரங்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் மாண்டியா (மண்டியா) மாவட்டம் போர்க்களமாக இருக்கிறது. மண்டியா விஸ்வரேஸ்வரய்யா சர்க்கிள் பகுதியில் திரண்ட கன்னட விவசாயிகள் நேற்றும் மறியல் போராட்டம் நடத்தினர். காவிரி ஆற்றில் குதித்து அரை நிர்வாணப் போராட்டமும் நடத்தினர். மண்டியா ஶ்ரீ நால்வடி கிருஷ்ணராஜ உடையார் அறக்கட்டளையினரும் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். மைசூரு- பெங்களூரு நெடுஞ்சாலையில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது.
ரகசியமாக நீர் திறப்பு: மாண்டியா, ஜெயசாமராஜேந்திர உடையார் சர்க்கிள் பகுதியை முற்றுகையிட்ட இன்னொரு தரப்பு கன்னட விவசாயிகள் சாலைகளை மறித்து மறியலில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கன்னட விவசாயிகள் முழக்கமிட்டனர். கர்நாடகாவில் வறட்சி நிலவும் நிலையில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா அரசு ரகசியமாக காவிரி நீரை திறந்துவிட்டது எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
கன்னட நடிகர், நடிகைகளுக்கு எச்சரிக்கை: இந்த பிரச்சனையில் கர்நாடகாவுக்காக கன்னட நடிகர், நடிகைகள் என திரை உலகம் வாய்மூடி மவுனியாக இருப்பதை ஏற்க முடியாது; காவிரி பிரச்சனைக்கான போராட்டத்தில் கன்னட திரை உலகம் அமைதி காக்காமல் களத்தில் இறங்க வேண்டும்; இல்லை எனில் கன்னட நடிகர்- நடிகைகளுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தும் நடத்துவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே












Click it and Unblock the Notifications