சட்டசபை தேர்தல் வெற்றிக்காக கை கோர்த்த சித்தரமையா, சிவகுமார்..மைசூரு சாமுண்டீஸ்வரி ஆசி உறுதியாம்

Subscribe to Oneindia Tamil

மைசூர்: எல்லா சாலைகளும் கர்நாடகாவை நோக்கி என்பது போல சட்டசபை தேர்தல் களம் அகில இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் ஆளும் பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என துடிக்கிறது காங்கிரஸ் கட்சி. அதே நேரத்தில் ஆட்சியை நீடிக்க வைக்க டபுள் இஞ்சின் சர்க்கார் என்ற முழக்கத்துடன் களம் இறங்கியுள்ளது பாஜக. கோவில் கோவிலாக போய் அரசியல் தலைவர்கள் வேண்டுதல் வைத்துள்ளனர். மைசூரு சாமுண்டீஸ்வரியை மனமுருகி வேண்டியுள்ளார் சித்தராமையா கூடவே டி.கே சிவகுமாரும் கரம் கோர்த்ததுதான் கூடுதல் சுவாரஸ்யம்.

கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

karnataka assembly election 2023: Chamundeshwari blessings and Promised to implement our guarantees

224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபை தேர்தல் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அத்துடன் ஆம் ஆத்மி 217 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

பிரதமர் மோடி 7 நாட்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரபிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் கர்நாடகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அதே போல் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.

ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா 90 வயதில் தனது வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் சுட்டெரிக்கும் வெயிலில் வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் கடைசி நாளான வெள்ளிக்கிழமை வரை அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

வாக்களிக்க வேண்டி மக்களிடம் கோரிக்கை வைத்த அரசியல் கட்சித்தலைவர்கள் அடுத்தது கோவில் கோவிலாக படையெழுத்தனர். அஞ்சநேயர் கோவிலில் அனுமன் சாலீசா பாடி பிராத்தனை செய்தார் முதல்வர் பசவராஜ் பொம்மை. நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல காங்கிரஸ் கட்சி தலைவர்களும் கோவில் கோவிலாக போய் வேண்டுதல் வைத்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று மனமுருகி வேண்டிக்கொண்டார். கூடவே கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமாரும் சென்றதுதான் சிறப்பம்சம். கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாரும் கையெடுத்து கும்பிட்டு வெற்றிக்காக வேண்டிக்கொண்டுள்ளார் சித்தராமைய்யா.

karnataka assembly election 2023: Chamundeshwari blessings and Promised to implement our guarantees

சித்தராமையா பொதுவாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்ற கருத்து உள்ளது. அவர் மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர். அவர் முதல்வராக இருந்த சமயத்தில் பட்ஜெட்டை கூட நல்ல நேரம் பார்த்து அவர் சமர்ப்பிப்பது கிடையாது. கடவுள் மீதும் அதிகளவில் நாட்டம் இல்லாத சித்தராமைய்யா பெரும்பாலும் அவராக சென்று கோவிலுக்கு வழிபாடு நடத்துவது எனபது இல்லை.

அதேவேளையில் கோவில் சார்ந்த திட்டங்கள், ஆதரவாளர்கள் அழைத்தால் கோவிலுக்கு செல்வார். இந்நிலையில் தான் தற்போது தேர்தலுக்கு முன்பாக சித்தராமையா சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளார். இது அவரது சொந்த மாவட்டமான மைசூரில் உள்ளது. எனவேதான் கடவுள் மீது நம்பிக்கையில்லாவிட்டாலும் தேர்தல் வெற்றிக்காக கோவிலுக்கு ஓடியுள்ளார் சித்தராமையா.

டிகே. சிவகுமாரும், சித்தராமையாவும் கை கோர்த்து கோவிலுக்கு சென்றது காங்கிரஸ் கட்சி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சிக்கு அம்மா சாமுண்டீஸ்வரியின் ஆசி கிடைத்து விட்டதாக கூறியுள்ளார்.

முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே எங்களது 5 உத்தரவாதங்களை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. டி.கே.சிவகுமாரும் சித்தராமையாவும் அம்மா சாமுண்டீஸ்வரியின் ஆசிர்வாதம் பெற்று, எங்களது உத்தரவாதங்களை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர் என்று பதிவிட்டுள்ளார் மல்லிகார்ஜூன கார்கே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+