செத்தாலும் சடலம் கூட பாஜக பக்கம் போகாது.. குமாரசாமிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா பளீர் பதிலடி!
மைசூர்: மதவாதிகளை எதிர்த்து காலந்தோறும் போராடுகிற என்னுடைய சடலம் கூட பாஜக பக்கம் போகாது என முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான குமாரசாமிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் சித்தராமையா. அப்போது பாஜகவில் இணைய சித்தராமையா முயற்சித்தார் என குமாரசாமி கூறி இருந்தார்.

இது தொடர்பாக மைசூரில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சித்தராமையா அளித்த பதில்: மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகிய போது பாஜகவில் சேர அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன் என குமாரசாமி கூறுகிறார். என் அரசியல் வாழ்க்கையில் மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்டமே தொடருகிறது. அப்படி நான் இறந்தாலும் என் உடல் கூட பாஜக பக்கம் போகாது.
மத வன்முறைகளைத் தூண்டுகிற பாஜக பக்கம் நான் போகிறேன் என்றால் நம்பவா முடியும்? டெல்லியில் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்கிறேன் எனில் உடனே பாஜகவில் சேருவதாக சொல்லவா முடியும்? அத்வானியை சந்தித்து நலம் விசாரித்த காரணத்தால் பாஜகவில் சேர முயற்சித்தேன் என்பது எல்லாம் அபத்தம்.
ஜனநாயக நாட்டில் அனைவரும் போராட்டங்கள் நடத்தலாம். கர்நாடகாவில் தனியார் வாகன உரிமையாளர்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தலாம். அவர்களது நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வும் காணலாம். இவ்வாறு சித்தராமையா கூறினார்.
-
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications