யாருய்யா நீ.. டவுசர் கொள்ளையர்களுக்கே டஃப் கொடுக்கும் ”ஜட்டி திருடன்” - சிரிப்பு காட்டும் சிசிடிவி
நாகப்பட்டினம்: நாகை அருகே சூப்பர் மார்க்கெட்டில் கைவரிசை காட்டிய ஜட்டி மட்டும் அணிந்துள்ள அரை நிர்வாண கொள்ளையனின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் கடைகள் வீடுகளில் கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கொள்ளையர்களைப் பிடிப்பதற்கு முக்கிய தடயமாக சிசிடிவி கேமராக்கள் பயன்பட்டு வருகிறது இதையடுத்து தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஜட்டி கொள்ளையன்
அவ்வாறு சிசிடிவி காட்சிகள் வெளியாகும்போது பல சுவாரசிய சம்பவங்கள் வெளியாவது வழக்கம் அந்த வகையில் டவுசர் கொள்ளையன், முகமூடி கொள்ளையர், குரங்கு மாஸ்க் கொள்ளையன், சிங்கம் முகமூடி கொள்ளையன் வரிசையில் தற்போது லேட்டஸ்ட் வரவாக ஜட்டியுடன் முக்காடு போட்டு திருடும் அரை நிர்வாண கொள்ளையன் ஒருவனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சூப்பர் மார்க்கெட் கொள்ளை
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் மற்றொரு கிளை மூன்று மாதங்களுக்கு முன்பு ஆலத்தம்பாடியில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜன.3 தேதி இரவு கடையை வழக்கம்போல பூட்டிவிட்டு ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் வீட்டுக்கு சென்று விட்டனர்.

ரூ.50 ஆயிரம் திருட்டு
இந்நிலையில் அன்று நள்ளிரவு ஜட்டி மட்டும் அணிந்த அரை நிர்வாண கோலத்தில் இரும்பு கிரில் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமி கடையில் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். கடையின் லாக்கரில் இருந்த 50 ஆயிரத்தை அலேக்காக திருடிய அரைநிர்வாண ஆசாமி பின்னர் தான் அங்கு சிசிடிவி பொருத்தப்பட்டிருப்பதை பார்த்துள்ளான் முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு என்பதைப்போல, ஏற்கனவே அவர் முகம் பதிவான நிலையில், சிசிடிவி முகம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக முக்காடு போட்டு தப்பித்து சென்றுள்ளான்.

சிசிடிவி காட்சிகள் வைரல்
கடையில் 57000 திருடு போய் இருக்கும் சம்பவம் கடை உரிமையாளருக்கு தெரியவந்த லையில்,சூப்பர்வைசர் கமலக்கண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அரைநிர்வாண ஆசாமி திருடும் சிசிடிவி காட்சிகளோடு அவர் பற்றி சரியான தகவல் தருவோருக்கு சன்மானம் ரூபாய் 15000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications