ஸ்கெட்சே திமுகவுக்கு தான்.. வாயை விட்டு சிக்கிய ஆர்.எஸ் பாரதி.. செங்கோட்டையன் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனவரி மாதத்துடன் தவெக ஆட்சி கவிழும் என திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி கூறினார். இந்நிலையில் திமுகவுக்கான நாட்கள் தான் எண்ணப்படுகிறது என்று செங்கோட்டையன் சூசகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகைப்பட்டினத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பினர். புதிய வரலாறு படைக்கும் தலைரவாக, இந்தியாவுக்கே வழிகாட்டியாக நம் முதலமைச்சர் தளபதி விஜய் இருக்கிறார். அவர் இருக்கும் வரை அவர் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் என்கிற வரலாற்றை படைப்பார். அது எதிர்க்கட்சிகளுக்கும் நன்றாக தெரிகிறது.

days-are-counted-for-dmk-not-tvk-sengottaiyan-warns-r-s-bharathi

ஆர்.எஸ் பாரதி சொல்வதை போல தவெக ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படவில்லை. திமுகவுக்கு தான் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது. இடைத்தேர்தலில் 100 சதவீதம் தவெக வெற்றி பெறுவோம். மற்ற கட்சிகள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை தேர்தலுக்கு பிறகு தெரிந்து கொள்வீர்கள். மின்வெட்டை சரி செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. அந்த நிலை இல்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்வேறு மின் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. வெற்றிகரமாக விரைவில் மக்களுக்கு மின்வெட்டே இருக்காது. கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மேலும் பல கட்சிகள் தவெக கூட்டணியில் இணைவார்கள். மிசாவில் நடக்காதது எதையும் முதலமைச்சர் பேசவில்லை. 2017 சட்டசபையில் சபாநாயகராக இருந்த தனபாலின் நாற்காலியை எடுத்து கீழே போட்டு, திமுக முன்னாள் எம்எல்ஏ அருகில் அமர்ந்தார். இவர்கள் அதைப்பற்றி சொல்வதற்கு அருகதை இல்லை.

மிசா கருத்து குறித்து முதலமைச்சர் ஏற்கனவே விளக்கமளித்துவிட்டார். அதுவே போதும். குறிப்பிட்ட வாக்கு வெற்றி பெற்றால் சின்னம் தொடர்ந்து வழங்கப்படும். சிறிய கட்சிக்கு கூட அதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாங்கள் ஆட்சியை பிடித்துள்ளோம். அதனால் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் மாறுதலுக்கு திமுக, அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போதும் தடை ஏற்பட்டது.

அதிமுக ஆட்சியில் மத்திய அரசால் தடை உருவானது. இப்போது கோட்டையில் இருப்பது 4.5 ஏக்கர் தான். எல்லா பணியை செய்வதற்கு அது போதாது. நீங்கள் சொல்வதை போல ஒரு திட்டத்துக்கு எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். இது இயற்கையில் இருக்கும் எண்ணம். எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கத்தான் செய்யும். எந்த இடத்தில் எதை கொண்டு வந்தாலும் அதில் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+