நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பீரியட்ஸ்" சார்.. கெஞ்சிய மாணவி.. லீக் ஆன ஆடியோ.. பாஜக நிர்வாகி காலேஜுக்கு ஆவேசமாக வந்த அதிகாரிகள்

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

நாகை: வேலியே பயிரை மேய்ந்துள்ளது.. சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில், நர்சிங் மாணவிகளிடம் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.. இன்றைய தினம் 2 விதமான நடவடிக்கைகள் ஆசிரியர் மீது எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

நாகையில் செயல்பட்டு வருகிறது அந்த தனியார் நர்சிங் கல்லூரி.. இங்கு உள்ளூர் மற்றும், வெளியூரில் இருந்து மாணவிகள் படித்து வருகிறார்கள்..

வெளியூர்களில் இருந்தும் நிறைய மாணவிகள் தங்கி படிப்பதால், இவர்களுக்காக ஹாஸ்டல் வசதியும் இங்கு உண்டு.. இந்த நர்சிங் காலேஜில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர்தான் இப்போது சிக்கி உள்ளார்.

மாதவிடாய் வலி சார்.. என்னால முடியாதுனு சொன்ன மாணவி.. நான் பார்த்துகிறேனு அழைத்த கல்லூரி ஆசிரியர் மாதவிடாய் வலி சார்.. என்னால முடியாதுனு சொன்ன மாணவி.. நான் பார்த்துகிறேனு அழைத்த கல்லூரி ஆசிரியர்

சில்மிஷம்

சில்மிஷம்

உடற்கூறுவியல் ஆசிரியராக பணிபுரியும் அவர் பெயர் சதீஷ்.. மாணவிகளிடம் இவர் அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.. இதைதவிர, இந்த காலேஜை பொறுத்தவரை, மாணவிகள் யாரும், அங்குள்ள மாணவர்களுடன் பேசக்கூடாது என்று விதி உள்ளது.. அப்படி யாராவது பேசினால், அந்த மாணவியை தனியாக அழைத்து கண்டிப்பது சதீஷின் வேலையாம்.. அப்படித்தான் ஒரு மாணவி சிக்கி உள்ளார்..

 மாதவிலக்கு

மாதவிலக்கு

அந்த மாணவிக்கு போனை போட்ட சதீஷ், "உன் மீது புகார் ஒன்று வந்துள்ளது... உடனடியாக அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்... அதனால் என்னுடைய வீட்டிற்கு வரவேண்டும்" என்று கூறியுள்ளார்.. அந்த மாணவியோ, நான் நாளைக்கு காலேஜ் வருகிறேன் சார் என்கிறார்.. அதற்கு சதீஷ், இப்போதே என் வீட்டிற்குத்தான் வந்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அழைப்பு விடுக்கிறார். அந்த மாணவியோ, ஆசிரியரிடம் எதை எதையோ சொல்லி சமாளிக்க முயல்கிறார். ஆனால் அந்த ஆசிரியர் விடாமல் அந்த மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுப்பது போல பேசுகிறார்..

 மாதவிலக்கு

மாதவிலக்கு

ஒருகட்டத்தில் தனக்கு மாதவிலக்கு வலி இருப்பதாக சொல்லி அந்த பெண் சமாளிக்கவே, அதையும் மீறி அந்த ஆசிரியர் "பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் வா" என்று வீட்டிற்கு அழைக்கிறார். இந்த செல்போன் ஆடியோவை, சம்பந்தப்பட்ட மாணவி தன்னுடைய பெற்றோர் மூலம் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி வைத்தார்... அந்த ஆடியோவும் இணையத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இது குறித்து தகவல் அறிந்த கலெக்டர் அருண்தம்புராஜ் சம்மந்தப்பட்ட கல்லூரியில் விசாரணை நடத்த மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டதன்பேரில், மாவட்ட சமூகநல அலுவலர் தமிமுன்சா தலைமையில் சமூக நலத்துறை அதிகாரிகள் காலேஜூக்கு வந்தனர்..

 ஆடியோ லீக்

ஆடியோ லீக்

அங்குள்ள மாணவிகள் எல்லாரையுமே தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனர்... பிறகு, மாணவிகளிடம் தனித்தனியே வாக்குமூலம் எழுதி வாங்கி கொண்டனர்.. சுமார் 1 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.. மாணவிகளிடம் பெறப்பட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.. அதே நேரத்தில் விசாரணை அறிக்கை கலெக்டரிடம் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.. இந்த அறிக்கை தொடர்பாக கலெக்டர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பார் என்கிறார்கள்.. இதனிடையே, பாலியல் தொல்லை தரும் அந்த ஆடியோ வெளியான நிலையில், கல்லூரி மாணவிகள் திடீரென போராட்டத்தில் இறங்கினர்..

 ஆர்ப்பரிப்பு

ஆர்ப்பரிப்பு

சதீஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி தாளாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. இந்த கல்லூரியின் தாளாளர் கார்த்திகேயன், பாஜக மாவட்ட தலைவர் ஆவார்.. மாணவிகள் கார்த்திகேயனை சூழ்ந்துக்கொண்டு ஆவேசமாக முழக்கமிட்டனர்.. அவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் கார்த்திகேயன் ஈடுபட்டதுடன், சதீஷை சஸ்பெண்ட் செய்துவிட்டதாகவும் கூறினார். அதுமட்டுமல்ல, மது போதையில் ஆசிரியர் சதீஷ் இதுபோல் நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது என்றும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவிகளிடம் உறுதி தந்தார் கார்த்திகேயன்.. ஒருபக்கம் கல்லூரி சார்பாகவும், இன்னொருபக்கம், சமூக நலத்துறை அதிகாரிகள் சார்பாகவும், சதீஷ் மீது நடவடிக்கை விரைவில் பாய உள்ளது.

டிரான்ஸ்பர்

டிரான்ஸ்பர்

ஆனால், எந்த துறையிலும், எவ்வளவு பெரிய தவறையே செய்திருந்தாலும், சஸ்பெண்ட் ஒன்றுதான் இவர்களுக்கு தரப்படும் அதிகபட்ச தண்டனையா? அல்லது டிரான்ஸ்பர் மட்டுமே துறைரீதியான நடவடிக்கையா? டிரான்ஸ்பர் செய்யப்படுவதால் இடம்தான் மாறுபடுமே தவிர, ஒருவரது புத்தி மாறுமா தெரியாது. எனவே, சஸ்பெண்ட், டிரான்ஸ்பர் என்று, தண்டனையை சுருக்கி கொள்ளாமல், துறைரீதியான கடுமையான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும்... இதுபோன்றவர்கள் பிள்ளைகளுக்கு, பாடம் நடத்தும் தகுதியே கிடையாது என்பதை அறிவித்து, அவர்களின் ஆசிரியர் பட்டமே பறிக்கப்பட வேண்டும்.. ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, இப்படியெல்லாம் அட்டகாசம் செய்தால், படிக்கும் பிள்ளைகளை யார்தான் வழிநடத்துவது?!

1 மணி நேரம்

1 மணி நேரம்


இதனிடையே, போராட்டம் செய்த மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் சார்பில் சமரசம் பேசப்பட்டபோதும், அதை அவர்கள் ஏற்கவில்லை.. இந்த தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் விரைந்து வந்து, கல்லூரி மீது விசாரணை நடத்தவும், மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிக்கு உத்தரவிடவும்தான் மாணவிகள் அமைதியாகி உள்ளனர்.. அதற்கு பிறகுதான், மாணவிகளிடம் தனித்தனியே வாக்குமூலம் எழுதி வாங்கப்பட்ட நிலையில், ஆட்சியரிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.. இந்த கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவர்கள் என்றில்லாமல், தம்பி போன்று வயதில் குறைந்த மற்ற மாணவர்களிடமும், மாணவிகள் யாரும் பேசக்கூடாது என்று ஆசிரியர் சதீஷ் கண்டிப்புடன் சொல்லி வந்தாராம்.. அப்படியே யாராவது மாணவிகள் பேசினாலும், அவர்களை கண்டிப்பது போல தனியாக அழைத்து சீண்டலில் ஈடுபடுவாராம்.

English summary
Did the teacher Sathish sexually harass the girl student and what happened in Nagai Nursing College
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X