திண்டுக்கல்லே திணறிடுச்சு.. புதுச்சேரியில் "அந்த சார்" அப்பதான் நுழைஞ்சாரு.. அதுக்குன்னு இப்படியா?
நாகை: சுற்றுலா பயணி ஒருவர், புதுச்சேரி பக்கம் போயுள்ளார்.. புதுச்சேரிக்குள் நுழைந்ததுமே, குஷியாகிவிட்டார்.. கடைசியில் என்னாச்சு பாருங்க.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பயணி அவர்.. நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்திருக்கிறார்.. பிறகு, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் சென்றுள்ளார்..

காரைக்கால்: அங்கே வாஞ்சூரில், தண்ணி அடித்துள்ளார்.. மூக்குமுட்ட குடித்து, தலைக்கு போதையேறிவிட்டது.. இதனால் நிலைதடுமாறி காணப்பட்டுள்ளார்.. அந்த நேரம் பார்த்து, அவரது பர்ஸ், டிரஸ், மற்றும் கையோடு கொண்டுவந்த பொருட்களை எல்லாம் தவறவிட்டுவிட்டார்.. இவரே எங்காவது அவைகளை மறந்துவைத்துவிட்டாரா? அல்லது யாராவது எடுத்து விட்டார்களா? என்று தெரியவில்லை.
குழப்பம்: சிறிது நேரம்கழித்துதான், தன்னிடம் பர்ஸ் உட்பட எதுவுமே இல்லாதது தெரிந்து அதிர்ந்தார்.. பிறகு, என்ன செய்வதறியாமல் தவித்து நின்றிருக்கிறார்.. அதனால், உடனடியாக, எப்படியாவது திண்டுக்கல்லுக்கு சென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்தார்.. இதற்காக திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு திட்டமிட்டு ரயில் நிலையம் சென்றுள்ளார்.
ஆனால் அவர் ரயில்வே ஸ்டேஷன் என்று நினைத்துக்கொண்டு, நேராக நாகப்பட்டினம் கலெக்டர் ஆபீசுக்குள் நுழைந்துவிட்டார்.. அந்த அளவுக்கு மண்டை நிறைய போதை நிரம்பி தழும்பியிருந்தது.
கலெக்டர் ஆபீசுக்குள்ளே சென்று, அங்கிருந்த அதிகாரிகளிடம், திருச்சிக்கு போகணும், பிளாட்பாரம் எங்கே? டிக்கெட் எடுக்கணும்? என்று கேட்டு, அடாவடி செய்துள்ளார்.. உடனே அங்கிருந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஓடிவந்து, அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த அப்புறப்படுத்த முயன்றுள்ளனர்..
அடாவடி: அப்போதுகூட, அது கலெக்டர் ஆபீஸ் என்று தெரியாமல், ரயில் எங்கே வரும்?என்று கேட்டார்.. இறுதியில், அவரை பாதுகாப்பு போலீசார் குண்டுகட்டாக தூக்கி கொண்டுவந்து வெளியே விட்டனர். இதனால், அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. கடைசியில், அவர் ரயில்வே ஸ்டேஷனுக்கு சரியாக போனாரா? இல்லையா? தவறவிட்ட அவரது பொருட்கள் கிடைத்ததா? இல்லையா? என்றே தெரியவில்லை.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications