அமமுக வெற்றி பெற்றால்… அதிமுக, திமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம்… டிடிவி தினகரன் பேச்சு
நாகை: சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்றால் அதிமுக, திமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும் மோதுகின்றன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பரிசு பெட்டி சின்னத்தில், எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது.

மாநிலம் முழுவதும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து, டிடிவி தினகரன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நாகை மக்களவை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செங்கொடியை ஆதரித்து டிடிவி.தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளாகளிடம் பேசிய அவர், நெல்லை, குமரி உள்ளிட்ட தொகுதிகளில் மாற்று வேட்பாளரை நிறுத்த எனக்கு பாஜக தூதுவிட்டது உண்மைதான் என்றார். இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்றால் அதிமுக, திமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என்றும் பதிலளித்தார்.
மேலும், மக்கள் நல கூட்டணியில் இருந்தபோது, திமுக-வை விமர்சித்த கம்யூனிஸ்டுகள், தற்போது 2 சீட்டுக்காக அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளதாக டிடிவி.தினகரன் விமர்சித்தார். தமிழ்நாட்டில் ராகுல்காந்தியை பிரதரமராக்குவோம் என கோஷமிடும் கம்யூனிஸ்டுகள், கேரளாவில் காங்கிரசை தோற்கடிப்போம் என பிரச்சாரம் செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications