பறவைகள் மீதான பாசம்! தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராமம்! இந்தக் காலத்திலும் இப்படி ஒரு ஊரு!
நாகை: ஊரே பட்டாசு சத்தம் அதிரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மட்டும், பட்டாசை கண்ணில் கூட பார்க்க முடியாது என்றால் நம்பும்படியாக உள்ளதா. ஆம், பறவைகளுக்காக பட்டாசு வெடிக்கும் பழக்கத்தையே கைவிட்டுள்ளனர் கிராம மக்கள்.
கொள்ளிடம் அருகே உள்ள பெரம்பூர் என்ற கிராமத்தில் வேம்பு மற்றும் புளிய மரங்கள் நிறைய உள்ளன. இந்த மரங்களில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. நத்தைகொத்தி, நாரை, கொக்கு, பாம்புத்தாரா, உள்ளிட்ட பறைவைகள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வந்து தங்குவது வழக்கம்.

இந்தாண்டு அதன்படி ஆயிரக்கணக்கில் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக பெரம்பூர் கிராமத்தில் உள்ள மரங்களில் தங்கியுள்ளன. ஆஸ்திரேலியாவிலிருந்து எல்லாம் இந்த கிராமத்திற்கு அபூர்வ பறவைகள் வரும் என ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். வேதாரன்யம் மற்றும் வேடந்தாங்கல் ஆகிய பகுதிகளில் இருந்தும் மடையான், நீர்காக்கை உள்ளிட்ட பறவைகள் பெரம்பூர் கிராமத்திற்கு வருமாம்.
இந்த பறவைகளை காக்க வேண்டும் என ஊர்மக்கள் ஒன்று கூடி பேசி முடிவெடுத்து அதன்படி பல ஆண்டுகளாக தீபாவளி பட்டாசுகள் வெடிப்பதை கைவிட்டுள்ளனர். இரவு பகல் என பறவைகள் இடும் ரீங்கார சத்தம் தங்கள் ஊருக்கே அழகை தருவதாக பெரம்பூர் கிராம மக்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.
பறவைகளை வேட்டையாடும் நோக்கில் ஊருக்கு யாராவது நுழைந்தால் கூட தாங்கள் ஒன்றுகூடி விரட்டியடித்து விடுவோம் என கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் பறவைகள் குறித்த புரிதலை சிறுவர், சிறுமிகளுக்கும் பெற்றோர் ஏற்படுத்தி விடுவதால் அவர்களும் பட்டாசு வேண்டும் என அடம் பிடிப்பதில்லை எனவும் பெரம்பூர் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். பறவைகளுக்காக பட்டாசு வெடிக்கும் வழக்கத்தை தவிர்த்து வரும் பெரம்பூர் கிராமமக்கள் உண்மையிலேயே பாராட்டத்தக்க வேண்டியவர்கள் என்பதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இருக்காது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications