பெட்ரோல் டேங்க் ‛ஃபுல்லா சரக்கு’.. வசமாய் சிக்கிய இளைஞர்! ராஜதந்திரம் வீணானது எப்படி?
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க்கிற்குள் மதுபானம் வைத்து கடத்தி சென்ற இளைஞரை போலீசார் வளைத்து பிடித்து கைது செய்தனர். இந்த வேளையில் ராஜதந்திரங்கள் வீணானதை உணர்ந்தவுடன் போலீசிடம் இருந்து தப்பிக்க அந்த நபர் அரங்கேற்றிய நாடகமாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
போதைப்பொருள், மதுபானம் கடத்தலை தடுக்க தமிழக போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் கூட புதுபுது வழிகளில் கடத்தல்காரர்கள் போதைப்பொருள், மதுபானத்தை கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

மதுபானத்தை எடுத்து கொண்டால் குறிப்பாக டாஸ்மாக் விடுமுறை நாளை கணக்கிட்டு சிலர் மொத்தமாக சரக்கு பாட்டில்களை வாங்கி வைத்து அதிக விலைக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்து பணம் பார்க்கின்றனர்.
இந்நிலையில் தான் நாகப்பட்டினத்தில் விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது இளைஞர் ஒருவர் தனது டூவீலரின் பெட்ரோல் டேங்க்கில் மறைத்து வைத்து ‛சரக்கு' கடத்தி சென்று போலீசாரிடம் சிக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதாவது மேம்பாலத்தில் போலீசார் இளைஞர் ஒருவரை பிடித்து பெட்ரோல் டேங்கை திறக்க சொல்கின்றனர். அதற்கு அந்த நபர் பெட்ரோல் டேங்கை திறக்க மறுக்கிறார். இதையடுத்து போலீஸ்காரரே டூவீலர் சாவியை வைத்து டேங்கை திறந்து பார்க்கிறார். அப்போது டேங்க்கில் பெட்ரோலுக்கு பதில் ‛சரக்கு' இருந்துள்ளது. இதை பார்த்த போலீசார் அவரை பிடித்தனர்.

இந்த வேளையில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க, ‛‛சார்.. இந்த பைக் என்னோடது இல்லை..'' என அந்த நபர் கூற, ‛‛பைக் யாருக்கு வேண்டுமானாலும் சொந்தமாக இருக்கட்டும். ஆனால் பைக் ஓட்டியது நீதானே'' எனக்கூறி கைது செய்தனர். இதையடுத்து ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே! இன்னும் பயிற்சி வேண்டுமோ என நினைத்தபடி அந்த நபர் திருதிருவென விழித்தார்.
இந்த வேளையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. டேங்க்கில் ‛சரக்கு' இருக்கும் நிலையில் டூவீலர் எப்படி இயங்குகிறது. பெட்ரோல் எங்கிருந்து செல்கிறது? என்பதை டூவீலரில் போலீசார் செக் செய்தனர். அப்போது டூவீலர் சீட்டுக்கு அடியில் இருந்து ஃடியூப் ஒன்று வெளியே வந்தது.
இதையடுத்து டூவீலர் சீட்டை தூக்கி போலீசார் பார்த்தனர். அங்கு தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் இருப்பதும், அந்த பாட்டிலில் இருந்து டியூப் மூலம் டூவீலர் இயக்கத்துக்கான பெட்ரோல் சப்ளை சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இளைஞரை கைது செய்த போலீசார், சரக்கோடு இருந்த டூவீலரை பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications