வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.. பள்ளி கல்லூரிகளுக்கு லீவ்!
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைபேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று மாலை 6.30 தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆட்சியர் சகாயராஜ் தம்புராஜ் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். இதையொட்டி, நாகை, கீள்வேளூர் வட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலாயம், உலகப்புகழ் பெற்ற கிறிஸ்துவ பேராலாயங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த பேராலாயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆட்சியர் சகாயராஜ் தம்புராஜ் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து கடலில் நீராடிவிட்டு, வேளாங்கண்ணி பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான தங்குமிடம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வேளாங்கண்ணி பேரூராட்சி மற்றும் பேராலய நிர்வாகம் செய்துள்ளன.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்றுள்ளன. இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக திருக்கொடி ஊர்வலமும், தேர்பவனியும் நடைபெறும். இந்த விழாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள். பெருவிழாவின் போது வாண வேடிக்கைகள் கோலாகலமாக நடைபெறும்.
இந்த விழாவிற்காக மின்விளக்குகள் அனைத்தும் பொருத்தப்பட்டு அந்த சுற்றுப்பகுதி முழுவதும் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவிற்காக சுமார் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இன்று ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாகை மற்றும் கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய விடுமுறை நாளில் முக்கிய அத்தியாவசிய துறைகள் அனைத்தும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கான பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. செப் 8 வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் விழாவில் பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய பவனி செப் -7 ம் தேதி மாலை நடக்கிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications