2 "ஆடுகள்".. நாகையில் நள்ளிரவில் நின்ற கார்.. டக்குனு பார்த்தால் 2 உருவம்.. பரபரக்கும் நாகப்பட்டினம்
நாகை: நாகையில் நடந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.
சமீப காலமாகவே, கால்நடைகள் திருட்டு அதிகரிக்க துவங்கியிருக்கிறது.. குறிப்பாக, ஆடுகளை குறி வைத்து நடக்கும் திருட்டுகளின் எண்ணிக்கைகள் பெருகி கொண்டே வருகிறது.

விவசாயிகள்: எத்தனையோ விவசாயிகள், தங்கள் கால்நடைகளை நம்பியே வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்கள்.. அப்படியிருக்கும்போது, இந்த ஆடுகளையும் குறி வைத்து திருடி சென்று விடுவதால், கண்ணீருடன் போலீசில் புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்கிறார்கள்.
பெரும்பாலும், கார்களில் வந்து ஆடுகளை மர்மநபர்கள் திருடி செல்கிறார்கள்.. எந்தெந்த பகுதியில் ஆடுகள் உள்ளன? எவ்வளவு ஆடுகள் இருக்கின்றன? எங்கே கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன? என்ற விவரங்களையும் முன்கூட்டியே வந்து மர்மநபர்கள் நோட்டமிட்டு செல்கிறார்களாம். பிறகு, சமயம் பார்த்து, நள்ளிரவில் காரை கொண்டு வந்து, அதில் ஆடுகளை அள்ளிப்போட்டுக் கொண்டு போய்விடுகிறார்கள்.
ஆடுகள்: சிலசமயம், இந்த ஆடுகளை தூக்க வரும்போது அவைகள் கத்தி கூச்சலிட்டுவிடும் என்பதற்காக, ஆடுகளின் வாயில் பிளாஸ்திரி ஒட்டிவிட்டு, அதற்கு பிறகு திருடுகிறார்கள்.. இப்படி டேப் ஒட்டி, கால்களையும் கயிறுகளால் கட்டி, அதற்கு பிறகு, கார் டிக்கியில் ஏற்றி செல்கிறார்கள். இதனால், நாளுக்கு நாள் போலீஸ் ஸ்டேஷன்களில் ஆடுகள் திருட்டு குறித்த புகார்களும் அதிகரித்து வருகிறது.

இந்த திருட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெருகி வருகிறது.. இந்த பகுதியில், சொகுசு கார்கள் மட்டுமல்லாமல், பைக்குகள், லோடு வேன்களிலும் வந்து ஆடுகளை மர்ம நபர்கள் திருடி செல்கிறார்களாம்.
வேளாங்கண்ணி: நேற்றுகூட, வேளாங்கண்ணி அருகிலுள்ள தெற்கு பொய்கைநல்லூரில், ஆடுகள் திருடு போயுள்ளன. அந்த பகுதியில், சண்முகப்பாண்டியன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார்..
இவர் நேற்று தன்னுடைய ஆடுகளை வழக்கமாக மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார்.. பிறகு தொழுவத்தில் ஆடுகளை கட்டி வைத்துவிட்டு, இரவு தூங்க சென்றுள்ளார்.. விடிந்ததும் ஆடுகளை பார்த்தபோது, அதில் எண்ணிக்கை குறைவாக இருந்தது.. 2 ஆடுகள் காணாமல் போயிருப்பதை பார்த்து பதறிவிட்டார். இதனால், உடனடியாக போலீசுக்கு சென்று புகார் தந்து, தன்னுடைய ஆடுகளை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொண்டார்.
மர்மநபர்கள்: போலீசாரும், சம்பவ இடத்துக்கு வந்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போதுதான், மர்மநபர்கள், காரில் வந்து ஆடுகளை திருடி செல்வது பதிவாகியிருந்தது.

அந்த வீடியோவில், நள்ளிரவு நேரத்தில் அந்த சொகுசு கார் வந்து நிற்கிறது.. காரிலிருந்து முன்பக்க கதவை திறந்து 2 பேர் வேகமாக கீழே இறங்குகிறார்கள்.. ஒருவர் ஆட்டினை எடுத்து தரவும், மற்றொருவர் அதனை வாங்கி காருக்குள் தூக்கி வீசுகிறார். பிறகு, கண்ணிமைக்கும் நேரத்தில் கார் அங்கிருந்து புறப்பட்டு செல்கிறது. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடையாளம்: இந்த திருட்டு நபர்கள் யார் என்று தெரியவில்லை.. எனவே, கார் அடையாளத்தை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். எனினும், இரவு நேரத்தில்தான் ஆடுகள் அதிகமாக திருடு போவதால், இரவு நேர ரோந்து பணியை போலீசார் துரிதப்படுத்தி, அந்த கும்பலை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications