மழை பெய்யுது! டக்னு லீவு விடுங்க கலெக்டர் சார்! இல்லனா உங்கள மாத்திடுவோம்! நாகை பொடியன் "மிரட்டல்"
நாகை: நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் அந்த மாவட்ட ஆட்சியரிடம் சிறுவன் லீவு கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது. லீவு தராட்டி உங்கள மாத்திடுவோம் என மிரட்டவும் செய்கிறார்கள்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த சீசனில் தமிழகத்திற்கோ புதுவைக்கோ வரும்படியாக காற்றழுத்தம் ஏதும் உருவாகவில்லை. இந்த மாத இறுதியில் உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
அந்த வகையில் இன்று முதல் நாளை மறுநாள் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் அனேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது.
மிக கனமழை என்பதால் 11 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை இந்த பகுதிகளில் மழை பெய்யலாம். அதேபோல், தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (23-11-2023) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் அனேக இடங்களில் இன்று (22-11-2023) மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நெல்லை உள்பட 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய சென்னையில் கனமழை பெய்து வந்தது. இரண்டாவது நாளாக பெய்து வந்த மழை விட்டுவிட்டு என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் கடற்கரைக்கு அருகே இருக்கும் பகுதிகளான மயிலாப்பூர், சாந்தோம், மெரினா, சிந்தாதிரிபேட்டை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது.
மற்ற பகுதிகளில் வானம் வெளீர் என காணப்படுகிறது. எனினும் காலை பெய்த மழைக்கு சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துவிட்டார். சென்னை பசங்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் விடுமுறை இல்லை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர்.
அது போல் டெல்டா மாவட்டமான நாகையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்காவது மழைக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸுக்கு சிறுவன் ஒருவன் கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளான்.
அந்த வீடியோவில் அந்த சிறுவன் கூறுகையில் இங்க பாருங்க கலெக்டர் அய்யா! இவ்ளோ மழை பெய்தும் இன்னும் பள்ளிகளுக்கு லீவு விடாமல் இருக்கீங்க. நானும் என் தம்பியும் டிவிய பார்த்து பார்த்து கண்ணெல்லாம் பூத்து போய்விட்டது. டக்னு லீவு விடுங்க. இல்லாட்டி உங்கள வேற ஊருக்கு மாத்திடுவோம் என சிறுவன் சொல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications