மீண்டும் மீண்டுமா? நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு! டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்
நாகப்பட்டினம்: நாகை - இலங்கை இடையே நாளை தொடங்க இருந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 13, 17, 19, தேதிகளில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என 3 முறை தேதி அறிவித்தும் இயக்க முடியவில்லை என்று தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. 'செரியபாணி' என்ற பெயர் கொண்ட இந்த கப்பல் இலங்கைக்கு சென்று வந்த நிலையில், இயற்கை சீற்றம் காரணமாக அக்டோபர் 20ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.

மீண்டும் கப்பல் சேவையை தொடங்க பயணிகள் பலர் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து 'சிவகங்கை' என்ற பெயர் கொண்ட கப்பல் அந்தமானில் இருந்து வரவழைக்கப்பட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த 13ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த கப்பலில் பயணம் செய்ய விரும்புவோர் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இதனால் பயணிகள் ஆர்வமுடன் இலங்கை செல்ல முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் திடீரென கப்பல் சேவை வரும் 17ஆம் தேதிக்கு (நேற்று) மாற்றப்படுவதாக கடந்த 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இலங்கை செல்ல 150க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று திடீரென கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, வரும் 19ஆம் தேதியில் (நாளை) இருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சில சட்டரீதியான அனுமதி கிடைக்காத காரணத்தால் கப்பல் சேவை வரும் 19ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அந்த கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 13, 17, 19, தேதிகளில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என 3 முறை தேதி அறிவித்தும் கப்பலை இயக்க முடியவில்லை என கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை பயணச்சீட்டை பெற்றவர்கள் தாங்கள் செலுத்திய கட்டணத்தை முழுவதுமாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
பழைய கப்பல் என்பதால் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரி செய்தால் மட்டுமே கப்பல் போக்குவரத்துக் கழகம் உரிய அனுமதி வழங்கும் என்றும், அதன் காரணமாகவே கப்பல் சேவை தேதி குறிப்பிடாமல் தற்போது ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications