Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று "சிரியா பாணி" ரெய்டு.. நாகை டூ இலங்கை கப்பல் சேவை சோதனை ஓட்டம்! பயணிகள் எப்போது செல்லலாம்?

Subscribe to Oneindia Tamil

நாகை: நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் இன்று சோதனை ஓட்டம் நடக்கிறது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, 60 கடல் மைல்கள் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசந்துறைமுகத்திற்கு 150 பேர் பயணிக்கும் விரைவு பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது. தமிழ்நாடு கடல்சார் வாரியம் மற்றும் மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டன. இதற்காக நாகப்பட்டினம் துறைமுக கால்வாயை தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

 Nagapattinam to Sri Lanka boat test drive is starting today

இது தொடர்பாக தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து, 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேசந்துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் (High Speed Passenger Ferry) இயக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் வாரியம், ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை மூலம் நாகப்பட்டினம் துறைமுக கால்வாய் தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் (Shipping Corporation of India), விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த பயணியர் கப்பல் பயணம், வெளிநாட்டு பயணம் என்பதால் ஒன்றிய அரசின் தொழிற்துறை பாதுகாப்பு அதிகாரிகள் (CISF) மூலம் கையாள ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினைத் துவக்க ஒன்றிய அரசு உத்தேசித்துள்ளது.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க பயணிகள் கப்பல் போக்குவரத்து, இலங்கை மக்கள் குறிப்பாக, தமிழ் மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள், வணிகம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஆகிய தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன், தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பகுதிகள், கலாச்சாரப் பகிர்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெறும்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இதற்காக பயன்படுத்தப்படும் சிரியா பாணி கப்பல் கேரள மாநிலம் கொச்சியில் தயாரிக்கப்பட்டு நேற்று நாகை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதனை மலர்தூவி மக்கள் வரவேற்றன. இதற்கான சோதனை ஓட்டம் இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஊழியர்கள் பயணம் செல்ல இருக்கிறார்கள். சோதனை ஓட்டம் முடிந்த பிறகு வரும் 10 ஆம் தேதி பயணிகளுக்கான கப்பல் சேவை தொடங்கும் என்று கூறப்படுகிறது. நாகையிலிருந்து புறப்பட்டு மூன்றரை மணி நேரத்தில் இந்த கப்பல் இலங்கை சென்றடையும்,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+